T20 World Cup Final: டாஸ்... டாஸ்... டாஸ்... இறுதிப்போட்டியில் டாஸ் வென்றது ஆஸி., ; அப்போ போட்டியை வெல்லப்போவது?
நடப்பு டி20 உலகக்கோப்பை போட்டிகளின் வெற்றி, தோல்வியில் டாஸ் மிக முக்கியமான பங்காற்றுவதால், இன்றைய போட்டியில் டாஸ் ஜெயிக்கப்போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிமாக இருந்தது.
இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடரானது கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டு இறுதி போட்டியை நெருங்கி உள்ளது. அரையிறுதி போட்டிகளில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணியும், இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணியும் இறுதி போட்டிக்குள் தகுதி பெற்றது. இந்நிலையில், இன்று துபாயில் நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.
இந்நிலையில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. நடப்பு டி-20 உலகக்கோப்பை போட்டிகளின் வெற்றி, தோல்வியில் டாஸ் மிக முக்கியமான பங்காற்றுவதால், இன்றைய போட்டியில் டாஸ் ஜெயிக்கப்போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிமாக இருந்தது.
டாஸ் ஜெயித்த அணி போட்டியை வெல்ல அதிக வாய்ப்புகள் என கணிப்புகள் தெரிவித்து வரும் நிலையில், முதலில் பேட்டிங் செய்ய இருக்கும் நியூசிலாந்து அதிக இலக்கை செட் செய்து டிஃபெண்ட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
Toss news from Dubai 🪙
— T20 World Cup (@T20WorldCup) November 14, 2021
Australia have won the toss and elected to field.
Which team is walking away with the 🏆? #T20WorldCup | #T20WorldCupFinal | #NZvAUS | https://t.co/1HyoPN4N0d pic.twitter.com/HyuugFjwhQ
இரு அணிகள் விவரம்:
Here's how both the teams line up 📝
— T20 World Cup (@T20WorldCup) November 14, 2021
Australia have gone with an unchanged side, while New Zealand make 1⃣ change. #T20WorldCup | #T20WorldCupFinal | #NZvAUS | https://t.co/1HyoPN4N0d pic.twitter.com/daaeRca3hb
கோப்பை யாருக்கு?
நடப்பு டி 20 உலகக்கோப்பை தொடரின் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றுகளில் ஆஸ்திரேலியா அணி ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. இந்த அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நல்ல பார்மில் உள்ளது. நியூசிலாந்தை பொருத்தவரை, சூப்பர் 12 சுற்றில் ஐந்தில் ஒரு போட்டியை மட்டும் இழந்து, நான்கில் வெற்றி பெற்றது. நாக் -அவுட் சுற்றில் பாகிஸ்தானை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் 5 முறை கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலியா அணி, இந்த முறை கோப்பையை கட்டாயம் வென்றாக வேண்டும் என்று களமிறங்கும். அதேபோல், 2019 ஒருநாள் உலகக்கோப்பை இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் கனே வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி கோப்பையை தவறவிட்டது. இதனால் இந்தமுறை கட்டாயம் கோப்பை வெல்ல நியூசிலாந்து அணி தீவிரமாக முயற்சிக்கும்.
கடந்த 2015 உலகக்கோப்பை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி கோப்பையை தவறவிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்