Rohit Sharma: ரோஹித் சர்மா பெயரில் அடுக்கப்பட்ட சாதனைகள்.. தோனி, கங்குலி பட்டியலில் இணைந்து அசத்தல்..!
Rohit Sharma: டி20 உலகக் கோப்பையில் வெற்றி பெற்ற போட்டிகளில் அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, அரையிறுதியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி 2024 டி20 உலகக் கோப்பையில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் ரோஹித் சர்மாதான். 39 பந்துகளை எதிர்கொண்டு 57 ரன்களை எடுத்தார்.
இந்த இன்னிங்ஸ் மூலம் ரோஹித் சர்மா தனது பெயரில் சிறப்பான சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதன்படி, ஒரே ஒரு டி20 உலகக் கோப்பை போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் என்ற பெருமையை படைத்துள்ளார். மேலும், ஒட்டுமொத்த பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளார்.
முதல் இடத்தில் யார்..?
டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த சாதனை பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பெயரில் உள்ளது. இவர் கடந்த 2021 ஒருநாள் உலகக் கோப்பையில் 303 ரன்கள் எடுத்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 248 ரன்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியில் 225 ரன்கள் எடுத்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.
மற்றொரு சிறப்பு சாதனை:
ரோஹித் பெயரில் மற்றொரு சிறப்பு பதிவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பையில் வெற்றி பெற்ற போட்டிகளில் அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ரோஹித் சர்மா 11 முறை 50 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்துள்ளார். இந்த பட்டியலில் கோலி 10 முறை அரைசதம் அடித்து டேவிட் வார்னர் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவர் 7 முறை அரைசதம் அடித்துள்ளார். 4 வது இடத்தில் உள்ள ஜோஸ் பட்லர் இந்த சாதனையை 5 முறை செய்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாக சிறப்பு சாதனை:
'ஹிட்மேன்' ரோஹித் சர்மா தொடர் சாதனைகளை படைத்து, எம்எஸ் தோனி, விராட் கோலி, முகமது அசாருதீன், சவுரவ் கங்குலி ஆகியோரையும் சமன் செய்துள்ளது. தவிர, இந்திய அணியின் கேப்டனாகவும் சிறப்பு சாதனை படைத்துள்ளார்.
கேப்டனாக 5,000 ரன்கள்:
இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா 57 ரன்கள் குவித்து 5,000 சர்வதேச ரன்களை கடந்துள்ளார். இந்த சாதனையை நிகழ்த்திய இந்திய அணியின் 5வது கேப்டன் ரோஹித். தற்போது இந்திய அணியின் கேப்டனாக 122 போட்டிகளில் விளையாடி 5,013 ரன்கள் குவித்துள்ளார் ரோஹித் சர்மா.
அவருக்கு முன், விராட் கோலி, எம்எஸ் தோனி, முகமது அசாருதீன் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய கேப்டனாக 5,000 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளனர். இந்தப் பட்டியலில், இந்திய கேப்டனாக 195 போட்டிகளில் விளையாடி 7,643 ரன்கள் குவித்துள்ள சவுரவ் கங்குலி ரோஹித்தை விட முன்னிலையில் உள்ளார். அசாருதீன் 221 போட்டிகளில் 8,095 ரன்கள் குவித்து மூன்றாவது இடத்தில் உள்ளார். டோனி இந்திய அணிக்கு அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்த போதிலும், அதிக ரன்கள் குவித்த கேப்டனாக இல்லை. இவர் 332 போட்டிகளில் 11,207 ரன்கள் எடுத்துள்ளார். இந்தப் பட்டியலில் இந்திய அணிக்கு 213 போட்டிகளில் கேப்டனாக இருந்து 12,883 ரன்கள் குவித்த விராட் கோலியின் பெயர் முதலிடத்தில் உள்ளது.
- விராட் கோலி: 12,883 ரன்கள் (213 போட்டிகள்)
- எம்.எஸ்.தோனி: 11,207 ரன்கள் (332 போட்டிகள்)
- முகமது அசாருதீன்: 8,095 ரன்கள் (221 போட்டிகள்)
- சௌரவ் கங்குலி: 7,643 ரன்கள் (195 போட்டிகள்)
- ரோஹித் சர்மா: 5,013 ரன்கள் (122 போட்டிகள்)