மேலும் அறிய

T20 World Cup 2022: இந்த 15 பேரை கொண்டு போங்க.. டி20 கப் நிச்சயம்.. தனது உத்தேச அணியை அறிவித்த ஆர்.பி.சிங்!

2007 டி20 உலகக் கோப்பை தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்த ஆர்.பி.சிங் டி 20 உலக கோப்பை தொடருக்கான தனது விருப்பமான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளார்.

கிரிக்கெட் போட்டிகளின் மிகப்பெரிய திருவிழாவாக கருதப்படும் டி20 உலககோப்பைப் போட்டித் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் டி20 உலகக் கோப்பை 2022 அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13ஆம் தேதி வரை தொடங்க இருக்கிறது. 

 இந்த தொடருக்காக பல்வேறு நாடுகளும் உலகக் கோப்பைக்கான தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன. உலககோப்பைக்கான அணியை சமர்ப்பிக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், உலககோப்பைக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், இந்தியாவின் டி20 உலகக் கோப்பை அணி எப்பொழுது வேண்டுமானாலும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்கு விருப்பமான உலககோப்பை அணியை பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில், 2007 டி20 உலகக் கோப்பை தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்த ஆர்.பி.சிங்கும் தனது விருப்பமான 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளார். அவரது அணியில், பெங்களூரில் உள்ள என்சிஏவில் தாடை காயத்தில் இருந்து மீண்ட பிறகு உடல் தகுதியுடன் இருப்பதாகக் கூறப்படும் ஹர்ஷல் படேலுக்கு இடமில்லை. மேலும், இந்திய அணியில் சீனியர் வீரர்களான முகமது ஷமி மற்றும் குல்தீப் யாதவுக்கு இடம் அளித்துள்ளார். 

அடுத்த டி20 உலகக் கோப்பைக்கான ஆர்பி சிங்கின் இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், கே.எல். ராகுல், தீபக் சாஹர்.

காத்திருப்பு: சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, ரவிச்சந்திரன் அஸ்வின்.

ஆசிய கோப்பை பின்னடைவுக்கு என்ன காரணம் : 

உலகக் கோப்பைக்கான அணியைத் தேர்வு செய்வதற்காக தேர்வுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் வரும் 15-ந் தேதி கூடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில், உலககோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் முக்கியமான பந்துவீச்சாளரும், இந்தியாவின் நம்பர் 1 பந்துவீச்சாளருமான பும்ரா காயத்தால் ஆடாததால் ஏற்பட்ட பின்விளைவை ஆசிய கோப்பையில் நன்றாக காண முடிந்தது.

 
பும்ரா:
 
பும்ரா 30 டெஸ்ட் போட்டிகளில் 128 விக்கெட்டுகளையும், 72 ஒருநாள் போட்டிகளில் 121 விக்கெட்டுகளையும், 58 டி20 போட்டிகளில் 69 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். பும்ரா உலககோப்பை போட்டித் தொடரில் ஆடிய அனுபவமும் உள்ளவர் என்பதும், இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் கேப்டன் பொறுப்பு வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 ஹர்ஷல் படேல்:
 
ஹர்ஷல் படேல் 17 டி20 போட்டிகளில் ஆடி 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல, ஐ.பி.எல். போட்டிகளில் 78 டி20 போட்டிகளில் ஆடி 97 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி பந்துவீச்சில் எந்தளவு பலவீனமாக இருந்தது என்பதை ஆசிய கோப்பையில் பார்க்க முடிந்தது. இதனால், இவர்கள் இருவரும் உலகக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணிக்காக திரும்ப இருப்பது மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது.

 

தலைப்பு செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Iran Announcement: ''அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க.!“ ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை; ட்ரம்ப்பை அலற வைத்த அறிவிப்பு
''அமெரிக்க வீரர்கள் சிக்குனா விடாதீங்க.!“ ஈரானியர்களுக்கு கொட்டும் பரிசு மழை; ட்ரம்ப்பை அலற வைத்த அறிவிப்பு
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
மாஸ் காட்டும் மஹிந்திரா BE 6 Sporteq SUV; வெறும் ரூ.11.45 லட்சம் மட்டுமே- விலை குறைவு ரகசியம் என்ன?
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிய வட கொரியா; பதறிப்போன ட்ரம்ப்; தென் கொரியா உடனான ராணுவ பயிற்சி குறைப்பு
Embed widget