T20 World Cup 2022: பிலிப்ஸ் டூ பாபர் அசாம்..! சூப்பர் 12ல் அசாத்தியமாக பிடிக்கப்பட்ட டாப் கேட்ச்கள்..!
தற்போது வரை டி20 உலகக் கோப்பை தொடரில் பிடிக்கப்பட்ட சிறப்பான கேட்ச்கள் என்னென்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.
டி-20 உலகக் கோப்பை கிரக்கெட் தொடரில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தியா அணி தற்போது வரை விளையாடியுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் பாகிஸ்தான் அணி விளையாடியுள்ள 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. மற்றொரு பிரிவில் மழை காரணமாக பல்வேறு போட்டிகள் ரத்தாகி உள்ளன. இதன்காரணமாக எந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதில் பெரும் ஆர்வம் எழுந்துள்ளது.
இந்நிலையில் தற்போது வரை நடைபெற்றுள்ள போட்டிகளில் பிடிக்கப்பட்ட சிறப்பான கேட்ச்கள் என்னென்ன?
கிளன் பிலிப்ஸ் vs ஆஸ்திரேலியா:
ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது சூப்பர் 12 போட்டியில் நியூசிலாந்து வீரர் கிளன் பிலிப்ஸ் அசத்தலான கேட்ச் பிடித்தார். இவர் மார்க்கஸ் ஸ்டயோனிஸ் தூக்கி அடித்த பந்தை சிறப்பாக டைவ் அடித்து கேட்ச் பிடித்தார்.
Superhuman Phillips!
— ICC (@ICC) October 22, 2022
We can reveal that this catch from Glenn Phillips is one of the moments that could be featured in your @0xFanCraze Crictos of the Game packs from Australia v New Zealand.
Grab your pack from https://t.co/8TpUHbQQaa to own iconic moments from every game. pic.twitter.com/VCDkdqmW3m
லியாம் லிவிங்ஸ்டன் vs ஆஃப்கானிஸ்தான்:
இங்கிலாந்து-ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 போட்டியில் லியாம் லிவிங்ஸ்டன் சிறப்பான கேட்ச் ஒன்றை பிடித்தார். இவர் ஆஃப்கானிஸ்தான் வீரர் ஷர்சாய் அடித்த பந்தை சிறப்பாக பாய்ந்து பிடித்தார்.
பட்லர் vs ஆஃப்கானிஸ்தான்:
இங்கிலாந்து-ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 போட்டியில் கேப்டன் பட்லர் சிறப்பான கேட்ச் ஒன்றை பிடித்தார். இவர் ஆஃப்கானிஸ்தான் வீரர் முகமது நபி அடித்த பந்தை சிறப்பாக லெக் சைடு திசையில் பாய்ந்து பிடித்தார். இதுவும் சிறப்பான கேட்ச்களில் ஒன்றாக அமைந்தது.
டி காக் vs ஜிம்பாவே:
ஜிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர் டிகாக் குதித்து சிறப்பான கேட்ச் ஒன்றை பிடித்தார். ஜிம்பாவே வீரர் சிகந்தர் ராசா அடித்த பந்தை விக்கெட் கீப்பர் டி காக் தாவி குதித்து சிறப்பாக கேட்ச் பிடித்து அசத்தினார்.
பாபர் அசாம் vs ஜிம்பாவே:
Babar with a beauty!
— T20 World Cup (@T20WorldCup) October 27, 2022
We can reveal that this catch from Babar Azam is one of the moments that could be featured in your @0xFanCraze Crictos of the Game packs from Pakistan v Zimbabwe.
Grab your pack from https://t.co/EaGDgPOSBl to own iconic moments from every game. pic.twitter.com/tIUxtqRu5E
பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 12 போட்டியில் ஜிம்பாவே அணி வெற்றி பெற்றது. எனினும் அந்தப் போட்டியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் சிறப்பான கேட்ச் ஒன்றை பிடித்திருந்தார். ஷதாப் கான் வீசிய பந்தை ரெஜீஸ் சகபாவ ஸ்லிப் திசையை நோக்கி அடித்தார். அப்போது ஸ்லிப் திசையில் நின்று கொண்டிருந்த பாபர் அசாம் லாவகமாக ஒற்றை கையில் பிடித்து அசத்தினார். இந்தக கேட்ச் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது குறிப்பிடத்தக்கது.