மேலும் அறிய

T20 World Cup 2021 : ஐசிசி டி 20 அணி : இந்திய அணியை சேர்ந்த ஒருவரும் இடம் பெறவில்லையா..?

ஐசிசி சார்பில் வெளியிடப்பட்ட டி 20 அணியில் இந்திய அணியை சேர்ந்த ஒருவரும் இடம் பெறாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் நடைபெற இருந்த டி 20 உலகக்கோப்பை தொடரானது கொரோனா பரவல் காரணமாக இயக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இந்த தொடரின் அரையிறுதி போட்டியின் முடிவில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணியும், இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணியும் இறுதி போட்டிக்குள் தகுதி பெற்றது.

இந்தநிலையில், நேற்று முன் தினம் துபாயில் நடைபெற்ற இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி முதல் முறையாக டி 20 உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியது. ஐசிசி தொடரில் ஒருநாள் உலகக்கோப்பை, சாம்பியன் டிராபி, டி 20 உலகக்கோப்பை என மொத்தம் ஆஸ்திரேலியா அணி 8 கோப்பையை தன்வசமாக்கியுள்ளது. 

T20 World Cup Final: Australia win first title as Kane Williamson's 85  comes in vain for New Zealand | Cricket News | Sky Sports

ஆஸ்திரேலியா அணியின் இந்த வெற்றிக்கு பிறகு, சர்வதேச கிரிக்கெட் சங்கம் இந்த தொடரில் விளையாடிய சிறப்பு மிக வீரர்கள் அணியை அறிவித்தது. அதில், ஆசியாவை சேர்ந்த 4 வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணியை சேர்ந்த ஒருவர் கூட இடம் பெறாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அதேபோல், டி 20 போட்டி என்றால் அதிரடி ஆட்டத்திற்கு பெயர்போன வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த வீரர்களும் இந்த அணியில் இடம் பெறவில்லை. 

இந்த உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 6 இன்னிங்ஸில் 303 ரன்கள் குவித்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 7 இன்னிங்ஸில் 289 ரன்கள் அடித்துள்ளார். மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் முஹம்மது ரிஸ்வான் 281 ரன்கள் எடுத்துள்ளார். 

T20 World Cup 2021: Shoaib Akhtar Feels Babar Azam Deserved To Become "Man  Of The Tournament" | Cricket News

பந்துவீச்சை பொறுத்தவரை ஸ்ரீலங்கா அணியை சேர்ந்த வணிந்து ஹசரங்கா 8 போட்டிகளில் 16 விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த ஆடம் ஜாம்பாவும், நியூசிலாந்து அணியை சேர்ந்த ட்ரெண்ட் போல்ட் தலா 7 போட்டிகளில் 13 விக்கெட்களை கைப்பற்றி 2 மற்றும் 3 இடத்தில் உள்ளனர். 

IPL 2021 - RCB rope in Wanindu Hasaranga and Dushmantha Chameera

ஐசிசி வெளியிட்ட மிகவும் மதிப்புமிக்க வீரர்களின் பட்டியல் பின்வருமாறு : 

1.டேவிட் வார்னர்(ஆஸ்திரேலியா), 2.விக்கெட்கீப்பராக ஜாஸ் பட்லர்(இங்கிலாந்து), 3.பாபர் அசாம் (c) கேப்டன்(பாகிஸ்தான்), 4. அசலங்கா(இலங்கை), 5. மார்க்ரம்(தென் ஆப்பிரிக்கா), 6.மொயின் அலி(இங்கிலாந்து),7.வணிந்து ஹசரங்கா(இலங்கை), 8.ஆடம் ஜாம்பா(ஆஸ்திரேலியா), 9.ஜாஸ் ஹாசில்வுட்(ஆஸ்திரேலியா), 10.ட்ரெண்ட் போல்ட்(நியூசிலாந்து), 11.ஆன்ரிச் நார்ட்ஜே(தென் ஆப்பிரிக்கா) 12.சஹீன் அப்ரிடி(பாகிஸ்தான்). 

இதில் டி 20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன் அடித்தவர் பட்டியலில் 3 வது இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் முஹம்மது ரிஸ்வான் பெயரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

உதவிக்கரம் நீட்டிய ஜெயலலிதா! கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. மு.க முத்து பற்றிய சுவாரஸ்யம்
உதவிக்கரம் நீட்டிய ஜெயலலிதா! கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. மு.க முத்து பற்றிய சுவாரஸ்யம்
இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்.. அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்
இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்.. அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்
என்னை கொல்ல சதி.. மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் உத்தரவில் என்ன உள்ளது ?
என்னை கொல்ல சதி.. மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் உத்தரவில் என்ன உள்ளது ?
எங்கப்பாவும், நானும் தோத்துட்டோம்.. கருணாநிதி பற்றி மு.க.முத்து கூறியது இதுதான்!
எங்கப்பாவும், நானும் தோத்துட்டோம்.. கருணாநிதி பற்றி மு.க.முத்து கூறியது இதுதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs EPS |
Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
உதவிக்கரம் நீட்டிய ஜெயலலிதா! கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. மு.க முத்து பற்றிய சுவாரஸ்யம்
உதவிக்கரம் நீட்டிய ஜெயலலிதா! கருணாநிதிக்கு எதிராகவே பரப்புரை.. மு.க முத்து பற்றிய சுவாரஸ்யம்
இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்.. அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்
இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்.. அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்
என்னை கொல்ல சதி.. மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் உத்தரவில் என்ன உள்ளது ?
என்னை கொல்ல சதி.. மதுரை ஆதீனம் தொடர்பான வழக்கில் முன் ஜாமின் உத்தரவில் என்ன உள்ளது ?
எங்கப்பாவும், நானும் தோத்துட்டோம்.. கருணாநிதி பற்றி மு.க.முத்து கூறியது இதுதான்!
எங்கப்பாவும், நானும் தோத்துட்டோம்.. கருணாநிதி பற்றி மு.க.முத்து கூறியது இதுதான்!
பக்தர்களுக்கு ஷாக்... திருவண்ணாமலை கோவில் தரிசன கட்டணம் உயர்வு! முழு விவரம்
பக்தர்களுக்கு ஷாக்... திருவண்ணாமலை கோவில் தரிசன கட்டணம் உயர்வு! முழு விவரம்
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
Railway Board Approval: 4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..
Embed widget