(Source: ECI/ABP News/ABP Majha)
Watch Video: ஓய்வறையில் சந்தித்து பாராட்டு: நமீபியா அணியை நெகிழ வைத்த பாகிஸ்தான்!
டி-20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றுக்கு முதல் முறையாக முன்னேறி இருக்கும் நமீபியா அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு இரு அணி வீரர்களும் கட்டித் தழுவிக் கொள்கின்றனர்.
டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றது. 12வது நாளான நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் - நமீபியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 189 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் டஃப் கொடுத்த நமீபியா, கடினமான இலக்கை நெருங்கியது. எனினும், இறுதியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. போட்டி முடிந்த பிறகு நமீபியா அணி டிரெஸ்ஸிங் ரூமிற்கு சென்ற பாகிஸ்தான் அணி வீரர்கள், இந்த தொடரில் இதுவரை சிறப்பாக விளையாடி வரும் நமீபியா அணிக்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் வீடியோ கிரிக்கெட் ரசிகர்களின் ‘ஹார்ட்ஸ்களை’ அள்ளியிருக்கிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு பகிர்ந்திருந்த வீடியோவில், முகமது ஹஃபீஸ், ஷாயீன் அஃப்ரிதி, ஷதாப் கான், ஃபகர் ஜமான் உள்ளிட்ட வீரர்கள் நமீபியா அணியின் டிரெஸ்ஸிங் ரூமிற்கு செல்கின்றனர். டி-20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றுக்கு முதல் முறையாக முன்னேறி இருக்கும் நமீபியா அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு இரு அணி வீரர்களும் கட்டித் தழுவிக் கொள்கின்றனர்.
வீடியோவை காண:
#SpiritofCricket - Pakistan team visited Namibia dressing room to congratulate them on their journey in the @T20WorldCup#WeHaveWeWill | #T20WorldCup pic.twitter.com/4PQwfn3PII
— Pakistan Cricket (@TheRealPCB) November 2, 2021
நேற்றைய போட்டியில், 190 என்ற கடினமான இலக்கை சேஸ் செய்து களமிறங்கிய நமீபியா அணிக்கு, ஸ்டீபர்ன் பார்ட் (29), கிரேக் வில்லியம்ஸ் (40), டேவி வீஸ் (43*) ஆகியோர் ரன் சேர்த்தனர். இதனால், நமீபியா இலக்கை நெருங்கியது. ஜெயிக்கிறோமோ தோக்குறோமோ சண்டை செய்யனும் என்பதை உறுதி செய்த நமீபியா, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்தது. எனினும் இலக்கை எட்ட தவறியதால், 45 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இதன் மூலம், 4/4 போட்டிகளிலும் வெற்றி பெற்று க்ரூப்:1-ல் பாகிஸ்தான் முன்னிலை பெற்றுள்ளது. இந்த க்ரூப்பில் இடம் பெற்றுள்ள அணிகளில் முதல் அணியாக அரை இறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்