மேலும் அறிய

Suryakumar Yadav ICC Rankings: அடுக்கடுக்கான சாதனை.. மிரளும் எதிரணிகள்..டி20யை ஆட்டிப்படைக்கும் சூர்யகுமார் யாதவ்..!

இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 883 ரேட்டிங் புள்ளிகளிலிருந்து 908 புள்ளிகள் பெற்று, டி20 பேட்டிங் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் வலம் வருகிறார். 

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் அறிமுகமானதில் இருந்து தொடர்ந்து ஏதாவது ஒரு சாதனையை படைத்து வருகிறார். தற்போது, மேலும் ஒரு சாதனையை தனது பெயரில் பதிவு செய்துள்ளார். 

நேற்று இரவு ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையை வெளியிட்டது. அதில், இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 883 ரேட்டிங் புள்ளிகளிலிருந்து 908 புள்ளிகள் பெற்று, டி20 பேட்டிங் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் வலம் வருகிறார். 

சூர்யகுமாஎ யாதவ் 908 புள்ளிகள் பெற்றதன் மூலம் டி20 சர்வதேச போட்டிகளில் எந்த ஒரு இந்திய பேட்ஸ்மேனும் பெற்ற அதிகபட்ச ரேட்டிங்காக பதிவானது. இதற்கு முன்னதாக விராட் கோலி டி20யில் அதிகபட்சமாக 897 ரேட்டிங் புள்ளிகளும், கேஎல் ராகுல் 854 ரேட்டிங் புள்ளிகளும் பெற்று இருந்தனர். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 900 ரேட்டிங்கை கடந்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை சூர்யா பெற்றுள்ளார். 

சர்வதேச டி20 அரங்கில் இதுவரை 915 ரேட்டிங் புள்ளிகள் வரை பெறப்பட்டுள்ளது. அதை இங்கிலாந்து வீரர் டேவிட் மலன் மட்டும் பெற்று இருந்தார். இவருக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச் 900 ரேட்டிங் புள்ளிகளை பெற்று இருந்தார். 

தற்போது, ஆரோன் பின்சையும் சூர்யகுமார் யாதவ் பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்தார். இன்னும், டேவிர் மலனை முந்த சூர்யகுமாருக்கு 7 புள்ளிகளே மீதம் உள்ளது. அதையும் முந்தினால் இதுவரை டி20 போட்டிகளில் யாரும் எடுக்காத ரேட்டிங் புள்ளிகளை பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை சூர்யகுமார் யாதவ் பெறுவார். 

இதுவரை அதிகபட்ச ரேட்டிங் புள்ளிகள் பெற்ற வீரர்கள்: 

  • டேவிட் மலன் (இங்கிலாந்து) - 915
  • சூர்யகுமார் யாதவ் (இந்தியா) - 908
  • ஆரோன் பின்ச் (ஆஸ்திரேலியா) - 900
  • விராட் கோலி (இந்தியா) - 897
  • பாபர் ஆசாம்(பாகிஸ்தான்)  - 896

சமீபத்தில் ஐசிசி வெளியிட்ட டாப் 10 டி20 பேட்ஸ்மேன்:

1
சூர்யகுமார் யாதவ்
இந்தியா
908
2
முகமது ரிஸ்வான்  836
3
டேவான் கான்வே  788
4
பாபர் ஆசாம்  778
5
ஐடன் மார்க்கரம் 748
6
டேவிட் மாலன் 719
7
க்ளென் பிலிப்ஸ் 699
8
ரிலீ ரோசோவ் 693
9
ஆரோன் பிஞ்ச் 680
10
அலெக்ஸ் ஹேல்ஸ் 655

மூன்றாவது சதம்:

இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 112 ரன்கள் குவித்தார். சூர்யாவின் டி20 சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இது மூன்றாவது சதம். இந்த சதத்திற்கு பிறகு தான் சூர்யா தரவரிசையில் இந்த ரேட்டிங் புள்ளிகளை பெற்றார். சர்வதேச டி20 போட்டிகளில் 3 சதங்கள் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை சூர்யா பெற்றுள்ளார். ரோஹித் சர்மா மட்டும் 4 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Selvaperundhagai:
Selvaperundhagai: "காமராஜரை கொண்டாடும் உரிமை காங்கிரசுக்கு மட்டுமே" - செல்வப்பெருந்தகை திட்டவட்டம்
கனவே கலையாதே... தஞ்சையில் விமான நிலையம் அமையும் கனவு நனவாகுமா?
கனவே கலையாதே... தஞ்சையில் விமான நிலையம் அமையும் கனவு நனவாகுமா?
"தெலுங்கு மக்களே! மன்னிச்சுடுங்க" சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட கஸ்தூரி!
Dravidam vs Tamil Desiyam: பற்றி எரியும் அரசியல் களம்: திராவிடம்- தமிழ் தேசியம் என்றால் என்ன? என்ன வித்தியாசம்?
Dravidam vs Tamil Desiyam: பற்றி எரியும் அரசியல் களம்: திராவிடம்- தமிழ் தேசியம் என்றால் என்ன? என்ன வித்தியாசம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Pawan Kalyan Controversy Speech | ’’நிர்வாகம் சரியில்லை!’’பவன் கல்யாண் பகீர்! அதிரும் ஆந்திராTVK Vijay warning cadres | ”கட்சிக்குள் கருப்பு ஆடு”சாட்டையை சுழற்றும் விஜய் கலக்கத்தில் தவெகவினர்Rahul Gandhi slams Modi|’’மோடி BORE அடிக்கிறார்’’இறங்கி அடித்த ராகுல்! பாசமலர்களின் THUGLIFESivagangai News |  தம்பி மனைவியின் உதட்டைகடித்து கொதறிய அண்ணன்!சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Selvaperundhagai:
Selvaperundhagai: "காமராஜரை கொண்டாடும் உரிமை காங்கிரசுக்கு மட்டுமே" - செல்வப்பெருந்தகை திட்டவட்டம்
கனவே கலையாதே... தஞ்சையில் விமான நிலையம் அமையும் கனவு நனவாகுமா?
கனவே கலையாதே... தஞ்சையில் விமான நிலையம் அமையும் கனவு நனவாகுமா?
"தெலுங்கு மக்களே! மன்னிச்சுடுங்க" சர்ச்சை கருத்துக்கு மன்னிப்பு கேட்ட கஸ்தூரி!
Dravidam vs Tamil Desiyam: பற்றி எரியும் அரசியல் களம்: திராவிடம்- தமிழ் தேசியம் என்றால் என்ன? என்ன வித்தியாசம்?
Dravidam vs Tamil Desiyam: பற்றி எரியும் அரசியல் களம்: திராவிடம்- தமிழ் தேசியம் என்றால் என்ன? என்ன வித்தியாசம்?
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.!
Breaking News LIVE 5th NOV 2024: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.!
மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை; தொல்குடியினர்‌ புத்தாய்வு திட்டம்‌ அறிமுகம்- என்ன தகுதி?
மாதம் ரூ.25 ஆயிரம் உதவித்தொகை; தொல்குடியினர்‌ புத்தாய்வு திட்டம்‌ அறிமுகம்- என்ன தகுதி?
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: முடிவு எப்போது ?
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது: முடிவு எப்போது ?
பகல் கொள்ளை! மதுரையில் இருந்து கோவை செல்ல 500 ரூபாய் டிக்கெட் - பயணிகள் ஷாக்
பகல் கொள்ளை! மதுரையில் இருந்து கோவை செல்ல 500 ரூபாய் டிக்கெட் - பயணிகள் ஷாக்
Embed widget