தென்னாப்பிரிக்காவின் ஆண்ட பரம்பரை! சன்ரைசர்ஸ்மூன்றாவது முறையாக சாம்பியன்! காவ்யாமாறன் ஹேப்பி
SA20 தொடரில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி

தென்னாப்பிரிக்காவின் SA20 இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் அணி போட்டியின் மூன்றாவது பட்டத்தை வென்றது.
காப்பாற்றிய பிரெவிஸ்
இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் அணி, பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணி, ஆரம்பத்தில் சரிவை சந்தித்தது, தொடக்க்க வீரர கொன்னர் ரன் எதும் எடுக்காமலும், ஷாய் ஹோப் 1 ரன்னிலும் நடையைக்கட்டினர். இதன்பின்னர் களமிறங்கிய டெவால்ட் பிரெவிஸ் அணியை சரிவிலிருந்து மீட்டது மட்டுமில்லாமல், சதமும் அடித்து அணியை சரிவிலிருந்து மீட்டார்.
சொதப்பிய மற்ற பேட்ஸ்மென்கள்:
சன்ரைசர்ஸ் ஈஸ்டர்னுக்கு எதிரான இறுதிப் போட்டியில், டெவால்ட் பிரெவிசைத் தவிர, மற்ற வீரர்கள் சொதப்பினர், பிரெவிஸ் 56 பந்துகளில் 101 ரன்கள் அடித்தார். இதன் மூலம், பிரான்சைஸ் கிரிக்கெட் லீக் இறுதிப் போட்டியில் சதம் அடித்த உலகின் இளைய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பிரெவிஸ் பெற்றார். பிரெவிஸைத் தவிர, வேறு எந்த பேட்ஸ்மேனும் இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட முடியவில்லை, இதன் காரணமாக பிரிட்டோரியா கேபிடல்ஸ் இறுதிப் போட்டியில் 158 ரன்கள் மட்டுமே எடுத்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.
சுமாராக தொடங்கிய சன்ரைசர்ஸ்
இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் அணிக்காக மேத்யூ பிரீட்ஸ்கே மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அணி மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை விளையாடினர். சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் அணி இறுதிப் போட்டியில் மோசமான தொடக்கத்தையே பெற்றது. ஐந்து ரன்கள் மட்டுமே இருந்த நிலையில் முதல் விக்கெட்டை இழந்தது.
மூன்றாவது முறையாக சாம்பியன்
சன்ரைசர்ஸ் அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 48 ரன்களை மட்டுமே இழந்தது. ஆனால் பிரீட்ஸ்கே மற்றும் ஸ்டப்ஸ் அணியை சரிவிலிருந்து மீட்டனர். மூன்றாவது வீரராக களமிறங்கிய மேத்யூ பிரீட்ஸ்கே 49 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 68 ரன்கள் எடுத்தார். இதற்கிடையில், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 41 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உட்பட ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் எடுத்தார். பிரீட்ஸ்கே மற்றும் ஸ்டப்ஸ் ஆகியோர் ஆட்டமிழக்காமல் அரைசதங்களுடன் தங்கள் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
இதன் மூலம் SA20 தொடரில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்




















