மேலும் அறிய

பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதான கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகாவுக்கு ஜாமீன்..!

பாலியல் வழக்கில் கைதான இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலகாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 

பாலியல் வழக்கில் கைதான இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகாவின் பாஸ்போர்ட் தற்போது முடக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை அவர் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார். அதுவரை அவர் சிட்னியில் இலங்கை தூதரகத்துடன் தங்கியிருந்து இந்த விவகாரம் முடியும் வரை விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

பார்க்லியா சிறையில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்னர் தனுஷ்க குணதிலக்கவின் பாஸ்போர்ட் மற்றும் 150,000 டாலர்களை ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

விதிக்கப்பட்ட நிபந்தனைகள்:

  • தினந்தோறும் காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும்
  • நாள்தோறும் காவல்துறையினரால் கண்காணிக்கப்படுவார்
  • டிண்டர் மற்றும் டேட்டிங் போன்ற செயலிகளை பயன்படுத்த தடை
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Nadu (@abpnadu)

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியின்போது பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக மீது வழக்கு பதியப்பட்டு அக்டோபர் 6 ம் தேதி கைது செய்யப்பட்டார். இந்தநிலையில், தனுஷ்க குணதிலகவுக்கு தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 

டி20 உலகக் கோப்பை தொடருக்கு தேர்வான குணதிலகா, கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரிருந்து விலகினார். அவருக்கு பதிலாக அஷேன் பண்டார சேர்க்கப்பட்டார். இருப்பினும், அணி நிர்வாகம் வீட்டுக்கு அனுப்பாமல் அணியுடன் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், கடந்த 2018-ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட்டில் முறைகேடு செய்ததற்காக குணதிலகாவை இடைநீக்கம் செய்தபோது இதேபோன்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குணதிலகா சிக்கிக் கொண்டார். இலங்கையில் நோர்வே பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறி இலங்கை வீரர் தனுஷ்க குணதிலகா மற்றும் அவரது நண்பர் ஒருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். 

இருப்பினும், இந்த வழக்கில் குணதிலகாவின் தலையீடு இல்லை என்று இவரை போலீசார் விடுவித்து, அவரது நண்பர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 

முன்னதாக, கடந்த 2021 ம் ஆண்டு ஜுலை மாதம் இலங்கை அணி வீரர்களான குசல் மெண்டிஸ், தொடக்க பேட்ஸ்மேன் தனுஷ்கா குணதிலகா மற்றும் விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெல்லா ஆகியோர் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியபோது ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக எச்சரிக்க பட்டனர். அதுகுறித்த வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது. 

 

தலைப்பு செய்திகள்

Asia Cup 2027: ஆசிய கோப்பை அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
ஆசிய கோப்பை 2027 அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Ajinkya Rahane Pension: ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget