(Source: ECI/ABP News/ABP Majha)
Yuzvendra Chahal: சாஹலுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது ஏன்? இம்ரான் தாஹிர் தந்த விளக்கம் இதுதான்!
யுஸ்வேந்திர சாஹலுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது ஏன்? என்று தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர் விளக்கம் தந்துள்ளார்.
அண்மையில் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில், சூர்யகுமார் யாதவ் தலைமையில் 3 டி 20 போட்டிகள், கே.எல்.ராகுல் தலைமையில் 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை எதிர் கொண்டு விளையாடியது. அதன்படி, 2 டி20 போட்டிகளில் சமநிலை பெற்ற இந்திய அணி ஒரு நாள் போட்டிகளை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றயது. மேலும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலகக் கோப்பை போட்டியின் முன்னோட்டமாக பார்க்கப்பட்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்து வரலாறு படைத்தது இந்திய அணி.
டி 20 தொடர்:
இதனையடுத்து சொந்த நாடு திரும்பியுள்ள இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் விளையாட உள்ளனர். கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக சர்வதேச டி 20 போட்டிகளில் விளையாடமல் இருந்த இருவரும் நாளை நடைபெறும் முதல் போட்டியில் விளையாட உள்ளதால் அவர்களின் பேட்டிங் செயல்பாடு எப்படி இருக்கும் என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.
அதேநேரம், இந்திய ஒரு நாள் அணியின் கேப்டனாக இருக்கும் கே.எல்.ராகுல் போன்ற மூத்த வீரர்களுக்கு இந்த தொடரில் பிசிசிஐ வாய்ப்பு அளிக்கவில்லை. முக்கியமாக சமீப காலங்களில் இந்திய அணி முக்கிய சுழற்பந்து வீச்சாளராக இருந்த யுஸ்வேந்திர சாஹல் இந்த தொடரில் கழற்றிவிடப்பட்டிருக்கிறார். இந்நிலையில், ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட குல்தீப் யாதவ் முதன்மை சுழற்பந்து வீச்சாளருக்கான இடத்தை பிடித்து விட்டதாலேயே யுஸ்வேந்திர சாஹலுக்கு வாய்ப்பு கிடைக்க வில்லை என்று இம்ரான் தாஹிர் கூறியுள்ளார்.
மீண்டும் தொடங்க வேண்டும்:
இது தொடர்பாக பேசிய தென்னாப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர், “ சாஹல் சிறப்பாக பந்து வீசவில்லை என்று நான் கருதவில்லை. அவருடைய பவுலிங் நன்றாக இருக்கிறது. அதனால் சாஹல் நீக்கப்படவில்லை. மாறாக குல்தீப் யாதவ் அவரை விட சிறப்பாக செயல்பட்ட ஒரு படி முன்னே இருக்கிறார். அவர் ஜடேஜாவுடன் சேர்ந்து இந்திய அணியில் சரியான கலவையை உருவாக்குகிறார். எனவே சாஹல் அனைத்தையும் மீண்டும் புத்துணர்ச்சியுடன் தொடங் வேண்டும். ஏனெனில் குல்தீப் யாதவ் தமக்கு கிடைத்த வாய்ப்பை இறுக்கமாக பிடித்துக் கொண்டுள்ளார். எனவே சாஹல் தன்னுடைய வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும். மிகவும் நல்ல பவுலரான அவர் விரைவில் கம்பேக் கொடுப்பார்” என்று பேசியுள்ளார் இம்ரான் தாஹிர்.
மேலும் படிக்க: India vs England test: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்... முகமது ஷமி சொன்ன அந்த வார்த்தை! ரசிகர்கள் உற்சாகம்!
மேலும் படிக்க: IND vs ENG Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்... முகமது ஷமியின் நிலை என்ன? விவரம் உள்ளே!