Smriti Mandhana : பேட்டிங் தரவரிசையில் அசத்தல் முன்னேற்றம்..! டி20, ஒருநாள் போட்டிகளில் ஸ்மிரிதி மந்தனா அபாரம்..!
இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா பேட்டிங் தரவரிசையில் முன்னேற்றத்தை கண்டுள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையாக வலம் வருபவர் ஸ்மிரிதி மந்தனா. சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. ஆனாலும், இந்திய அணிக்காக ஸ்மிரிதி மந்தனா அசத்தலான ஆட்டத்தை வௌிப்படுத்தினார். இந்த தொடரில் அவர் 111 ரன்களை எடுத்து அசத்தினார்.
மேலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக ஸ்மிரிதி மந்தனா விளங்கினார். அந்த போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 228 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்காக தொடக்கம் முதல் சிறப்பாக ஆடிய ஸ்மிரிதி மந்தனா 91 ரன்களை விளாசி வெற்றி பெற வைத்தார்.
ஸ்மிரிதி மந்தனா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் மகளிர் பேட்டிங் தரவரிசையில் அவர் முன்னேறியுள்ளார். ஒருநாள் போட்டிக்கான கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான தரவரிசையில் 10வது இடத்தில் இருந்த ஸ்மிரிதி மந்தனா 3 இடங்கள் முன்னேறி 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 698 புள்ளிகள் பெற்று 7வது இடத்தில் உள்ளார்.
மேலும் படிக்க : KL Rahul : டி20 போட்டிகளில் கே.எல்.ராகுல் புதிய சாதனை...! அப்படி என்ன செய்தார் தெரியுமா..?
முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஆலிசா ஹேலி 785 புள்ளிகளுடன் உள்ளார். 2வது இடத்தில் ஆஸ்திரேலியாவில் பெத் மூனி உள்ளார். மூன்றாவது இடத்தில் இங்கிலாந்தின் நடாலி ஸ்சிவேர் உள்ளார். டாப் 10 வீராங்கனைகள் பட்டியலில் ஸ்மிரிதி மந்தனா மட்டுமின்றி இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரும் உள்ளார். அவர் 662 புள்ளிகளுடன் 9வது இடத்தில் உள்ளார்.
டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் ஸ்மிரிதி மந்தனா 2வது இடத்தில் தொடர்ந்து அசத்தி வருகிறார். முதலிடத்தில் பெத் மூனி 743 புள்ளிகளுடன் உள்ளார். இரண்டாவது இடத்தில் ஸ்மிரிதி மந்தனா 731 புள்ளிகளுடன் உள்ளார். மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் மெக் லேனிங் 725 புள்ளிகளுடன் உள்ளார். இந்திய வீராங்கனை ஷபாலி வர்மா 666 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளார்.
ஸ்மிரிதி மந்தனா இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1 சதம், 2 அரைசதங்களுடன் 325 ரன்களை குவித்துள்ளார். 75 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5 சதம், 24 அரைசதங்கள் உள்பட 2 ஆயிரத்து 983 ரன்களை குவித்துள்ளார். 95 டி20 போட்டிகளில் ஆடி 17 அரைசதங்களுடன் 2 ஆயிரத்து 303 ரன்களை விளாசியுள்ளார்.
மேலும் படிக்க : IND vs AUS 1st T20 Highlights: மேத்யூ வேட், க்ரீன் அதிரடி... 208 ரன்களை சேஸ் செய்து அசத்திய ஆஸி.. அணி
மேலும் படிக்க : Womens Asia Cup : அக்டோபர் 1-ந் தேதி தொடங்கும் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்...! இந்தியா - பாகிஸ்தான் மோதல் எப்போது..?