ஸ்மிருதி மந்தனா வீட்டில் அதிர்ச்சி! கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்ட திருமணம்.. காரணம் என்ன?
“இன்று காலையில் அவர் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ஸ்மிருதி மந்தனாவின் தந்தை திரு. ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.

இந்திய மகளிர் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
மந்தனா தந்தைக்கு மாரடைப்பு:
இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்மிருதி மந்தனா மற்றும் இசையமைப்பாளர் பலாஷ் முச்சலின் இன்று சாங்லியின் சாம்டோலில் உள்ள மந்தனா பண்ணை வீட்டில் நடைப்பெற இருந்தது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டடுள்ளது
உடனடியாக சாங்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் தற்போது அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். செய்தியைக் கேட்டதும் ஸ்மிருதி மந்தனாவும் அவரது குடும்பத்தினரும் மருத்துவமனைக்கு விரைந்தனர்
உடல்நிலை சீராக உள்ளது:
தற்போதைய நிலவரப்படி, மந்தனா தந்தையின் உடல்நிலை சீராகவும், கண்காணிப்பில் இருப்பதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்,
இது குறித்து மந்தனாவின் மேலாளர் தெரிவிக்கையில் “இன்று காலையில் அவர் காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ஸ்மிருதி மந்தனாவின் தந்தை திரு. ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. நாங்கள் சிறிது நேரம் காத்திருந்தோம். ஒருவேளை அது சாதாரணமாக வலியாக இருக்கலாம் என்று நினைத்தோம். அவர் உடல்நிலை சீராக இல்லததால் அவரது நிலைமையை கருத்தில் கொண்டு மருவத்துவமனையில் சேர்த்தோம். அவர் நலமாக இருப்பார் என்று நினைத்தோம். எனவே, எந்த ஆபத்தும் எடுக்க வேண்டாம் என்று நினைத்தோம், எனவே நாங்கள் ஆம்புலன்ஸை அழைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். இப்போது அவர் கண்காணிப்பில் உள்ளார்," என்று ஸ்மிருதியின் மேலாளர் கூறினார்.
"ஸ்மிருதி தன் தந்தைக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது உங்களுக்குத் தெரியும். தனது தந்தை குணமடையும் வரை, இன்று நடக்கவிருந்த இந்தத் திருமணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அவர் முடிவு செய்துள்ளார். இப்போது அவர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார், மேலும் மருத்துவர் அவர் மருத்துவமனையில் தங்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.
VIDEO | Tuhin Mishra, manager of Indian cricketer Smriti Mandhana, confirms that her father is not well and the wedding has been indefinitely postponed.
— Press Trust of India (@PTI_News) November 23, 2025
(Full video available on PTI Videos – https://t.co/n147TvqRQz) pic.twitter.com/K5EVJwyR4h
திருமணம் ஒத்திவைப்பு:
இதன் காரணமாக ஸ்மிருதி மந்தனா மற்றும் பலாஷ் முச்சலுக்கு இடையே திட்டமிடப்பட்ட திருமணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது, மேலும் இன்றைய திருமண விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்மிருதியின் மேலாளர் துஹின் மிஸ்ரா உறுதிப்படுத்தினார்.மேலும் சாம்டோல் திருமண மண்டபத்தில் அலங்காரங்களை அகற்றும் பணி தற்போது நடந்து வருகிறது.




















