மேலும் அறிய

Sanju Samson:மனசு உடைஞ்ச சாம்சன்! ரோஹித்செஞ்ச காரியம் - என்னதான் நடந்துச்சு?

டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கான பிளேயிங் லெவனில் இடம் பிடிக்காதது குறித்தும், அணியின் கேப்டன் ரோஹித் சர்மா குறித்தும் சஞ்சு சாம்சன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னர் ஒரு கேப்டன் அணியில் விளையாடும் வீரர்களைப் பற்றி யோசிக்காமல், அணியின் தேர்வு செய்யப்படாத என்னை பற்றி யோசித்து எனக்காக பேசி ஆறுதல் கூறியது பெரும் மகிழ்ச்சியை ஏற்பாடுத்தியது என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை:

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஆடவர் டி20 உலகக் கோப்பையை ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி வென்றது. முன்னதாக,உலகக் கோப்பை டி20 அணியில் விக்கெட் கீப்பர் பேட்டர்களான சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பண்ட் இடம் பெற்றிருந்தனர். ஆனால், டி20 உலகக் கோப்பை தொடர் முழுவதும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. ஆனால் ரிஷப் பண்ட் அனைத்து போட்டிகளிலும் விளையாடினார். ரிஷப் பண்டி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூழலிலும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

ரோஹித் ஷர்மா செய்த சம்பவம்:

இந்த நிலையில் தான் டி20 உலகக் கோப்பை தொடர் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பேட்டி ஒன்று பேசியுள்ளார் சஞ்சு சாம்சன். அதில்,"தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான இறுதிப்போட்டிக்கு முன் நான் பிளேயிங் லெவனில் இருக்க போகிறேன் என்று அணி நிர்வாகம் என்னிடம் தெரிவித்திருந்தது. இதனால் நான் அந்த போட்டிகாக தீவிரமாக என்னை தயார்செய்து கொண்டேன். மேலும் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட போகிறோம் என்ற மகிழ்ச்சியிலும் நான் இருந்தேன். 

ஆனால் டாஸ் நிகழ்வுக்கு முன்னதாக இந்திய அணி மாற்றங்கள் ஏதும் செய்யாமல் அதே பிளேயிங் லெவனுடன் விளையாட முடிவுசெய்ததாக கேப்டன் ரோஹித் சர்மா என்னிடம் வந்து கூறினார். அதனால் என்னால் இறுதிப்போட்டியில் விளையாடமுடியாமல் போனது. பின்னர் இப்போட்டிக்கு இந்திய அணி வீரர்கள் தயாராகி கொண்டிருந்த போது கேப்டன் ரோஹித் சர்மா என்னிடம் வந்து, தான் ஏன் இந்த முடிவை எடுத்தேன் என்பதை விளக்கத் தொடங்கினார்.

அப்போது அவர், ஒரு நிமிடத்திற்கு பிறகு வந்து நீ என்னை திட்டிக் கொண்டு தானே இருக்கிறாய். நீ மகிழ்ச்சியாக இல்லை. உன் மனதில் ஏதோ இருப்பதை நான் உணர்கிறேன் என்று  கூறினார். ஒரு வீரராக, நிச்சயமாக நான் விளையாட விரும்புகிறேன், ஆனால் அணிக்கு என்ன தேவை என்பதை அறிந்து கொண்டேன்.  மேலும் ரோஹித் சர்மா தாம் விளையாடும் வீரர்களின் மீது கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, டாஸ் செய்வதற்கு முன், என்னுடன் 10 நிமிடங்கள் செலவிட்டார்.

உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னர் ஒரு கேப்டன் அணியில் விளையாடும் வீரர்களைப் பற்றி யோசிக்காமல் அணியின் தேர்வு செய்யப்படாத என்னை பற்றி யோசித்து எனக்காக பேசி ஆறுதல் கூறியது பெரும் மகிழ்ச்சியை ஏற்பாடுத்தியது. அவரிடம் இருக்கும் மிகச்சிறந்த குணமாக நான் இதனை பார்க்கிறேன். மேலும் அவரது இந்த செயலானது என் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும்"என்று சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

BSNL New Logo: காவி நிறத்துக்கு மாறிய பிஎஸ்என்எல் சின்னம்; இந்தியா பெயர் பாரத் என மாற்றம்
BSNL New Logo: காவி நிறத்துக்கு மாறிய பிஎஸ்என்எல் சின்னம்; இந்தியா பெயர் பாரத் என மாற்றம்
Ajith :  அஜித் குமாரின் கார் ரேஸிங் அணியின் லோகோ அறிவிப்பு...துபாயில் நடைபெறும் மிஷலின் 24H ரேஸில் கலந்துகொள்ளப் போவதாக தகவல்
Ajith : அஜித் குமாரின் கார் ரேஸிங் அணியின் லோகோ அறிவிப்பு...துபாயில் நடைபெறும் மிஷலின் 24H ரேஸில் கலந்துகொள்ளப் போவதாக தகவல்
Sakshi Malik:பிரிஜ் பூஷன் சரண் சிங் செய்த கொடூரம்; விவரித்த மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக்
Sakshi Malik:பிரிஜ் பூஷன் சரண் சிங் செய்த கொடூரம்; விவரித்த மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக்
TVK: தவெக மாநிலச் செயலாளர் திடீர் மரணம்... தொலைபேசியில்  ஆறுதல் கூறிய விஜய்
தவெக மாநிலச் செயலாளர் திடீர் மரணம்... தொலைபேசியில் ஆறுதல் கூறிய விஜய்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sanitation Worker Crying :10 வயதில் மதுவால் சீரழிந்த மகன்கள்..வீடு அருகே TASMAC கடை! கதறி அழும் தாய்Irfan baby Delivery issue|”இர்ஃபானை மன்னிக்க  முடியாது” கொதித்தெழுந்த அமைச்சர் மா.சு..சர்ச்சை வீடியோMamallapuram | பைப்பால் அடித்த பெண்கள்! ”No Parking-னு சொன்னது குத்தமா?”ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்Priyanka Gandhi  | ROAD Show-ல் காந்தி குடும்பம்?வரலாறு படைப்பாரா பிரியங்கா வாய்ப்பு தருமா வயநாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BSNL New Logo: காவி நிறத்துக்கு மாறிய பிஎஸ்என்எல் சின்னம்; இந்தியா பெயர் பாரத் என மாற்றம்
BSNL New Logo: காவி நிறத்துக்கு மாறிய பிஎஸ்என்எல் சின்னம்; இந்தியா பெயர் பாரத் என மாற்றம்
Ajith :  அஜித் குமாரின் கார் ரேஸிங் அணியின் லோகோ அறிவிப்பு...துபாயில் நடைபெறும் மிஷலின் 24H ரேஸில் கலந்துகொள்ளப் போவதாக தகவல்
Ajith : அஜித் குமாரின் கார் ரேஸிங் அணியின் லோகோ அறிவிப்பு...துபாயில் நடைபெறும் மிஷலின் 24H ரேஸில் கலந்துகொள்ளப் போவதாக தகவல்
Sakshi Malik:பிரிஜ் பூஷன் சரண் சிங் செய்த கொடூரம்; விவரித்த மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக்
Sakshi Malik:பிரிஜ் பூஷன் சரண் சிங் செய்த கொடூரம்; விவரித்த மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக்
TVK: தவெக மாநிலச் செயலாளர் திடீர் மரணம்... தொலைபேசியில்  ஆறுதல் கூறிய விஜய்
தவெக மாநிலச் செயலாளர் திடீர் மரணம்... தொலைபேசியில் ஆறுதல் கூறிய விஜய்
PAK vs ENG: ராட்சத ஃபேன், ஹீட்டர்களால் ஆடுகளத்தை காய வைக்கும் பாகிஸ்தான்! காரணம் என்ன?
PAK vs ENG: ராட்சத ஃபேன், ஹீட்டர்களால் ஆடுகளத்தை காய வைக்கும் பாகிஸ்தான்! காரணம் என்ன?
TNPSC: தொடரும் அதிரடிகள்; டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் இவ்வளவு சீக்கிரமா?- வெளியான அறிவிப்பு
TNPSC: தொடரும் அதிரடிகள்; டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் இவ்வளவு சீக்கிரமா?- வெளியான அறிவிப்பு
பருவமழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து அதிகரிப்பு
பருவமழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்து அதிகரிப்பு
STR 49: பழைய மாறி வந்த சிம்பு! எஸ்டிஆர் 49 படத்திற்காக ஸ்பென்சரில் வாங்கிய பொருட்கள் இத்தனையா?
STR 49: பழைய மாறி வந்த சிம்பு! எஸ்டிஆர் 49 படத்திற்காக ஸ்பென்சரில் வாங்கிய பொருட்கள் இத்தனையா?
Embed widget