மேலும் அறிய

Sandeep Lamichhane: 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. கிரிக்கெட் வீரர் லாமிச்சானேவுக்கு 8 ஆண்டுகள் சிறை!

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக நேபாள கிரிக்கெட் வீரர் லாமிச்சானே மீது காத்மாண்டு மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் ஆகஸ்ட் 21 ம் தேதி வழக்குப்பதிவு செய்தது.

நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லாமிச்சானே மீண்டும் சிறைக்கு செல்கிறார். 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, சந்தீப் லாமிச்சானேவுக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

சந்தீப் லாமிச்சானே மீதான குற்றச்சாட்டு என்ன?

நேற்று இந்த வழக்கை விசாரித்த நேபாள நீதிமன்றம் சந்தீப் லாமிச்சானேவுக்கு 8 ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. செய்தி நிறுவனமான ANI இன் படி, ஷிஷார் ராஜ் தாகலின் பெஞ்ச் சந்தீப் லாமிச்சானே குற்றவாளி என்று தீர்ப்பளித்து, அவருக்கு 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. நேபாள கிரிக்கெட் அணியின் கேப்டனாக சந்தீப் லாமிச்சானே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு டிசம்பரில், சந்தீப் லமிச்சானே தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மைனர் பெண் ஒருவர் குற்றம் சாட்டினார்.

வழக்கு விவரம்: 

17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக நேபாள கிரிக்கெட் வீரர் லாமிச்சானே மீது காத்மாண்டு மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் ஆகஸ்ட் 21 ம் தேதி வழக்குப்பதிவு செய்தது. அப்போது, சந்தீப் லாமிச்சானே கரீபியன் பிரிமீயர் லீக்கில் விளையாடுவதற்காக டிரினிடாட் மற்றும் டொபாகோ சென்றிந்தார். பின்னர், சந்தீப் லாமிச்சானே கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பின்னர், சந்தீப் லாமிச்சானே வங்கிக் கணக்கு சீல் வைக்கப்பட்டு, அவரது சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. 

தொடர்ந்து, கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் காத்மாண்டு மாவட்ட நீதிமன்றம் குற்றத்தின் அடிப்படையில் லாமிச்சானேவை சுந்தராவில் உள்ள மத்திய சிறைக்கு அனுப்பியது. இதனை தொடர்ந்து, கடந்த ஜனவரி 2023ம் தேதி சந்தீப் லாமிச்சானே நிபந்தனை அடிப்படையில் ஜாமீனில் வெளிவந்தார். அப்போது, நீதிபதி துருவ்ராஜ் நந்தா மற்றும் நீதிபதி ரமேஷ் தஹல் ஆகியோர் அடங்கிய பதான் உயர்நீதிமன்றத்தின் கூட்டு பெஞ்ச் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி சில நிபந்தனைகளுடன் 20 லட்சம் நேபாள ரூயாய் பத்திரத்தில் சந்தீப்பை விடுவிக்க உத்தரவிட்டநிலையில், அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். 

சந்தீப் லாமிச்சானேவின் கிரிக்கெட் வாழ்க்கை:

நேபாளத்தின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் சந்தீப் லமிச்சனேவும் ஒருவர். சந்தீப் லாமிச்சானே நேபாளத்திற்காக 51 ஒருநாள் மற்றும் 51 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் அவர் ஒருநாள் போட்டியில் 112 விக்கெட்டுகளையும் டி20 இல் 98 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 

இது தவிர ஐபிஎல்லில் விளையாடிய முதல் நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சனே ஆவார். சந்தீப் லமிச்சனே ஐபிஎல் 2018 சீசனில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் விளையாடிய ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம்பிடித்திருந்தார். அதில் அவர் 9 போட்டிகளில் விளையாடும் வாய்ப்பைப் பெற்று 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்
BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்
இனி குளுகுளு பள்ளிகள்தான்.. காலநிலை மாற்றக் கல்வி- மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றும் ஜில் அறிவிப்பு
இனி குளுகுளு பள்ளிகள்தான்.. காலநிலை மாற்றக் கல்வி- மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றும் ஜில் அறிவிப்பு
Annamalai: ”அமைச்சர் நேருவின் சாதனைகள்” பட்டியலிட்ட அண்ணாமலை - ”ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை”
Annamalai: ”அமைச்சர் நேருவின் சாதனைகள்” பட்டியலிட்ட அண்ணாமலை - ”ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை”
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
ABP Premium

வீடியோ

காக்கி சட்டையுடன் உல்லாசம்!கையும், களவுமாக சிக்கிய DGP!பகீர் வீடியோ
பாதியில் வெளியேறியது ஏன்?”பேசவிடாம மைக் OFF பண்றாங்க” ஆளுநர் பரபரப்பு அறிக்கை | RN Ravi Walk Out
”தாய் மதத்துக்கு திரும்பு”கொந்தளிக்கும் பாஜகவினர்!AR ரஹ்மான் சர்ச்சை பின்னணி?
19 பீர் பாட்டில்கள்... நண்பர்களின் விபரீத போட்டி! பறிபோன உயிர்கள்
வீடியோ எடுத்த பெண் மீது CASE! முந்தைய இரவு நடந்தது என்ன? தீபக்கின் நண்பர் பகீர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்
BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்
இனி குளுகுளு பள்ளிகள்தான்.. காலநிலை மாற்றக் கல்வி- மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றும் ஜில் அறிவிப்பு
இனி குளுகுளு பள்ளிகள்தான்.. காலநிலை மாற்றக் கல்வி- மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றும் ஜில் அறிவிப்பு
Annamalai: ”அமைச்சர் நேருவின் சாதனைகள்” பட்டியலிட்ட அண்ணாமலை - ”ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை”
Annamalai: ”அமைச்சர் நேருவின் சாதனைகள்” பட்டியலிட்ட அண்ணாமலை - ”ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை”
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
TN Assembly: ஆளுநர் ஹாட்ரிக் வாக்-அவுட்.. புது காரணத்தை சொன்ன ஆர்.என். ரவி - சட்டபேரவையில் என்ன பிரச்னை?
ஒட்டுமொத்த தமிழ்நாடும் போராட்டக் களம்; தொடங்கிய சத்துணவு ஊழியர்கள் போராட்டம்- தீர்வு காணுமா அரசு
ஒட்டுமொத்த தமிழ்நாடும் போராட்டக் களம்; தொடங்கிய சத்துணவு ஊழியர்கள் போராட்டம்- தீர்வு காணுமா அரசு
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
சட்டசபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ரவி.! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர்
Governor Ravi explain: சட்டசபையில் இருந்து வெளியேறியது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
சட்டசபையில் இருந்து வெளியேறியது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி பரபரப்பு அறிக்கை
Top 10 News Headlines: ஆளுநர் ஆக்‌ஷன், ஸ்டாலின் ரியாக்‌ஷன், ரிசர்வ் வங்கி பரிந்துரை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஆளுநர் ஆக்‌ஷன், ஸ்டாலின் ரியாக்‌ஷன், ரிசர்வ் வங்கி பரிந்துரை - 11 மணி வரை இன்று
Embed widget