மேலும் அறிய

MINY Vs SFU: அதிரடியாக ஆடிய கோரி ஆண்டர்சன்..... ஆட்டத்தை தனதாக்கிய சான் பிரான்சிஸ்கோ!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் இரண்டாவது போட்டியில் எம்.ஐ.நியூயார்க் அணியை வீழ்த்தி சான்பிரான்சிஸ்கோ அணி வெற்றிப்பெற்றது.

இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல் தொடர் போல், அமெரிக்காவில் தற்போது எம்.எல்.சி (மேஜர் லீக் கிரிக்கெட்) என்ற கிரிக்கெட் தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும்  சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணியின்  உரிமையாளர்கள் இந்த தொடரிலும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மற்றும் எம்.ஐ நியூயார்க் என்ற பெயரில் அணிகள் விளையாடி வருகின்றனர். 

இந்த மேஜர் லீக் கிரிக்கெட் தொடரானது நேற்று முதல் அமெரிக்காவில் கோலகலமாக தொடங்கியது. இதன் முதல் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி, லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டனர். இதில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றிப்பெற்றது.

MINY Vs SFU: அதிரடியாக ஆடிய கோரி ஆண்டர்சன்..... ஆட்டத்தை தனதாக்கிய சான் பிரான்சிஸ்கோ!

இரண்டாவது லீக் போட்டி

 இன்று எம்.ஐ நியூயார்க்கிற்கும் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ்க்கும் போட்டி நடைப்பெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த சான் பிரான்சிஸ்கோ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஃபின் ஆலன் மற்றும் மேத்யூ வேட் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுக்கவில்லை. பின்னர் வந்தவர்களும் வந்த வேகத்திற்கு பெவிலியன் திரும்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் 7 ஓவருக்கு 50 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது சான் பிரான்சிஸ்கோ.

அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கோரி ஆண்டர்சன்

MINY Vs SFU: அதிரடியாக ஆடிய கோரி ஆண்டர்சன்..... ஆட்டத்தை தனதாக்கிய சான் பிரான்சிஸ்கோ!

பின்னர் களமிறங்கிய கோரி ஆண்டர்சன், சதாப் கான் அணியின் நிலைமையை புரிந்துகொண்டு நிதானமாக ஆட தொடங்கினர். அரம்பத்தில் நிதானமாக ஆடி வந்த இருவரும் பின்னர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சதாப் கான் 30 பந்துகளை எதிர்கொண்டு ஐந்து சிக்ஸர், நான்கு பவுண்டரிகளுடன் 61 ரன்கள் எடுத்து ட்ரெண்ட் போல்டிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார். ஆனால் கோரி ஆண்டர்சன் அதிரடி ஆட்டம் தொடர்ந்து கொண்டே இருந்தது. 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு  215 ரன்களுக்கு எடுத்தது சான் பிரான்சிஸ்கோ . அதிகபட்சமாக கோரி ஆண்டர்சன் 52 பந்துகளில் 7 சிக்ஸர் 4 பவுண்டரிகளுடன் மொத்தம் 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆரம்பமே ஆடிப்போன எம்.ஐ 

இந்த இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய எம்.ஐ நியூயார்க் அணி தொடக்கமே சரிவை சந்திக்க நேரிட்டது. தொடக்க ஆட்டக்காரரான ஸ்டீவன் டெய்லர் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே  சைதன்ய பிஷ்னோய்விடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்த வந்த மோனாங்க் படேலும் 8 ரன்களுக்கு திரும்பி அனுப்பபட்டார். பின்னர் வந்த நிக்கோலஸ் பூரன் சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தார். 

MINY Vs SFU: அதிரடியாக ஆடிய கோரி ஆண்டர்சன்..... ஆட்டத்தை தனதாக்கிய சான் பிரான்சிஸ்கோ!

அதிரடியாக அடியும் அணிக்கு வெற்றி கிட்டவில்லை

அடுத்தடுத்து விக்கெட்டுகள்  சரிந்தாலும் பொறுப்புடன் விளையாடிய கேப்டன் கெய்ரன் பொல்லார்ட் மற்றும் டிம் டேவிட் அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர்.  ஒருபக்கம் டிம் டேவிட் அரைசதம் விளாச மறுப்பக்கம் கெய்ரன் பொல்லார்ட் உறுதுணையாக நின்றார். ஆனால் இருவரின் அதிரடியான ஆட்டம் அணிக்கு வெற்றியை தேடித் தரவில்லை. 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்தது எம்.ஐ நியூயார்க். இதன் மூலம் தனது முதல் போட்டியிலே முதல்  வெற்றியை பதிவு செய்தது சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ்.

தலைப்பு செய்திகள்

Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Manav Suthar: இந்திய சுழலின் எதிர்காலம்.. மானத்தை காப்பாத்தப்போகும் மானவ் சுதர் - யார்?
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Embed widget