மேலும் அறிய

Sachin Double Century:நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்; அன்றே சம்பவம் செய்த சச்சின்! எத்தனை இரட்டை சதம்?

டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் நியூசிலாந்து அணிக்கு எதிராக தான் தன்னுடைய முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். அதோடு மொத்தமாக சர்வதேச அளவில் 7 இரட்டை சதங்களை பதிவு செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் வென்று அசத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மற்றொரு உள் நாட்டு தொடரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அக்டோபர் 16 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் தொடங்குகிறது. 

முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் நியூசிலாந்து அணிக்கு எதிராக தான் தன்னுடைய முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். அதோடு மொத்தமாக சர்வதேச அளவில் 7 இரட்டை சதங்களை பதிவு செய்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆறு சதங்கள் அடங்கும். இது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:

நியூசிலாந்துக்கு எதிராக 217 ரன்கள்:

கடந்த 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் தன்னுடைய முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார் சச்சின் டெண்டுல்கர். 344 பந்துகள் களத்தில் நின்ற சச்சின் டெண்டுல்கர் 217 ரன்களை குவித்தார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 201 ரன்கள்:

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தன்னுடைய இரண்டாவது இரட்டை சதத்தை கடந்த 2000 ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி பதிவு செய்தார். இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 609 ரன்களை குவித்தது. இதில் 281 பந்துகள் களத்தில் நின்ற சச்சின் டெண்டுல்கர் 27 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 281 ரன்கள் குவித்தார். 

வங்கதேச அணிக்கு எதிராக 248 ரன்கள்:

கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மூன்றாவது டெஸ்ட் இரட்டை சதத்தை பதிவு செய்தார் டெண்டுல்கர். டாக்காவில் நடைபெற்ற இந்த போட்டியில் கடைசி வரை களத்தில் நின்ற சச்சின் டெண்டுல்கர் 379 பந்துகளில் 248 ரன்களை குவித்தார். இந்த போட்டியில் தான் கடைசி விக்கெட்டுக்கு களம் இறங்கிய ஜாகீர் கான் 75 ரன்களை எடுத்தார். இவர்களது பார்டனர்ஷிப் 133 ரன்களை குவித்தது. இது 11 வது பேட்ஸ்மேனின் அதிகபட்ச ரன்னாக அமைந்தது. 

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 241 ரன்கள்:

சிட்னி மைதானத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தன்னுடைய நான்காவது இரட்டை சதத்தை பதிவு செய்தார் சச்சின். அந்த சுற்றுப்பயணத்தில் சச்சின் 5 இன்னிங்ஸ்களில் 82 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இச்சூழலில் தான் இந்த இரட்டை சதத்தை பதிவு செய்தார். அதன்படி, 436 பந்துகளில் 33 பவுண்டர்கள் உட்பட மொத்தம் 241 ரன்களை குவித்தார்.

இலங்கை அணிக்கு எதிராக 203 ரன்கள்:

இலங்கை அணிக்கு எதிராக ஜூலை 29, 2010 ஆம் ஆண்டு தன்னுடைய 5வது இரட்டை சதத்தை பதிவு செய்தார் சச்சின் டெண்டுல்கர். 23 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட 343 பந்துகளில் 203 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் 150 ரன்களை கடந்ததன் மூலம் 18 முறை 150 ரன்களை கடந்த பிராட்மேனின் சாதனையை முறியடித்தார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 214 ரன்கள்:

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 6வது இரட்டை சதத்தை பதிவு செய்தார். கடந்த 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் மொத்தம் 363 பந்துகள் களத்தில் நின்ற சச்சின் 214 ரன்களை குவித்தார்.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம்:

ஒரு நாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக கடந்த 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். 147 பந்துகளில் 200 ரன்களை பதிவு செய்தார் சச்சின். இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதத்தை பதிவு செய்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் சச்சின் டெண்டுல்கர்.

தலைப்பு செய்திகள்

Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
LIVE | Kerala Lottery Result Today (14.08.2026): வெள்ளிக்கிழமை மங்களம் பொங்குமா? பணமழை பொழியுமா? கேரளா லாட்டரி குலுக்கல்!
LIVE | Kerala Lottery Result Today (14.08.2026): வெள்ளிக்கிழமை மங்களம் பொங்குமா? பணமழை பொழியுமா? கேரளா லாட்டரி குலுக்கல்!
Embed widget