![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Rohit Sharma Record: ரிக்கிபாண்டிங்கின் சாதனையை சமன் செய்வாரா ரோகித்சர்மா..?
ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங்கின் சாதனையை ரோகித்சர்மா சமன் செய்வாரா? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
![Rohit Sharma Record: ரிக்கிபாண்டிங்கின் சாதனையை சமன் செய்வாரா ரோகித்சர்மா..? Rohit Sharma Record ENG vs IND T20 Rohit Captaincy Record Most Consecutive Wins 1 Win Away Ricky Ponting Record Rohit Sharma Record: ரிக்கிபாண்டிங்கின் சாதனையை சமன் செய்வாரா ரோகித்சர்மா..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/10/befe83ac0842d4440487ddb4ea30855d1657432699_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது. எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தாலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்றது மூலமாக டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக 13 வெற்றிகளை பெற்ற முதல் கேப்டன் என்ற அரிய சாதனையை படைத்தார். நேற்று நடைபெற்ற போட்டியிலும் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் தொடர்ச்சியாக 19 வெற்றிகளைப் பெற்ற கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.
இந்த நிலையில், இன்று நடைபெறும் மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் இந்திய கேப்டன் ரோகித்சர்மா புதிய சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கலாம். அதாவது தொடர்ச்சியாக கேப்டனாக அதிக வெற்றிகள் பெற்ற ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங்கின் சாதனையை ரோகித்சர்மா சமன் செய்வார்.
ரிக்கிபாண்டிங் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்தவர். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் கேப்டனாக அதிக வெற்றிகளை பெற்ற வீரர் என்ற சாதனையை அவர் 220 வெற்றிகளுடன் ரிக்கிபாண்டிங் தன்வசம் வைத்துள்ளார்.
விராட்கோலி கேப்டன்சியில் இருந்து விலகிய பிறகு இந்திய அணிக்கு மூன்று வடிவ போட்டியிலும் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித்சர்மா தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்று வருகிறது. ரோகித்சர்மா தலைமையில் இந்திய அணி நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளை தொடர்ச்சியாக வென்றுள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெற்று ரிக்கிபாண்டிங்கின் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற அரிய சாதனையை சமன்செய்வார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
மேலும் படிக்க : India vs England 2nd T20 : புவி ஸ்விங்.. கேப்டன்சியில் ரோகித் கிங்... 49 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!
மேலும் படிக்க : Dhoni In England: இங்கிலாந்திற்கு சென்று இந்திய வீரர்களை உற்சாகப்படுத்திய தோனி..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)