RCB-W vs UPW-W Live: அதிரடியாக ஆடிய அலீசா ஹீலி.. 4வது தோல்வியைத் தழுவிய ஆர்.சி.பி..!
RCB-W vs UPW-W, WPL 2023 LIVE Score: ஆர்.சி.பி மற்றும் உ.பி. வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான மகளிர் பிரீமியர் லீக் போட்டி குறித்த லைவ் அப்டேட்களுக்கு ஏபிபி நாடு தளத்தில் இணைந்து இருங்கள்.
LIVE
Background
மகளிர் பிரீமியர் லீக் போட்டி இந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐ.பி.எல் போட்டி போல் மிகவும் பரபரப்பான சுவாரஸ்யமான ஆட்டங்களால் மகளிர் பிரீமியர் லீக் தொடரரும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறத் துவங்கியுள்ளது. மொத்தம் ஐந்து அணிகள் களமிறங்கியுள்ளது.
மகளிர் ஐ.பி.எல்.:
இதில், உத்தர பிரதேச வாரியர்ஸ் அணியை தவிர மற்ற நான்கு அணிகளும் தலா மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளது. ஒவ்வொரு அணிக்கும் லீக் சுற்றில் தலா எட்டு போட்டிகள் உள்ளது. இதில் அதிக வெற்றிகளைப் பெற்று முதல் இடத்தில் உள்ள அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கும், அடுத்த இரண்டு இடங்களில் உள்ள அணிகள் எலிமினேட்டரிலும் மோதும்.
4 ஓவர்களில் 38 ரன்கள்..! வெற்றியை நோக்கி உபி வாரியர்ஸ்...!
139 ரன்கள் இலக்குடன் களமிறங்கியுள்ள உத்தரபிரதேச அணி விக்கெட் இழப்பின்றி 4 ஓவர்களில் 38 ரன்கள் எடுத்துள்ளது.
சரவெடியாய் ஆரம்பித்து.. புஷ்வானாமாய் போன பெங்களூர்..! உத்தரபிரதேசத்திற்கு 139 ரன்கள் டார்கெட்..!
உத்தரபிரதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இதனால், உத்தரபிரதேச அணிக்கு 139 ரன்கள் இலக்காக அமைந்துள்ளது.
ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்த உ.பி..!
போட்டியின் கடைசி 4 ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தினை மொத்தமாக தன்வசப்படுத்தியுள்ளது உ.பி வாரியர்ஸ்
தேவையில்லாத ரன் அவுட்..!
ரிச்சா கோஷ் 18 ஓவரின் முதல் பந்தில் தேவையில்லாமல் ரன் அவுட் ஆகியுள்ளார்.
மீண்டும் விக்கெட்..!
17வது ஓவரில் பெரி ஆட்டமிழந்த நிலையில், பெர்ன்ஸும் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார்.