MS Dhoni Birthday: எங்கள் அண்ணன், எங்கள் தல.. ’மஞ்சள் உடையில் மீண்டும் ஜொலிப்போம்’.. எம்.எஸ். தோனியை வாழ்த்திய ஜடேஜா..!
இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா, தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் தனது கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள், முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் நட்சத்திர வீரரும், சென்னை அணி வீரருமான ரவீந்திர ஜடேஜா எம்.எஸ். தோனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடருக்காக தயாராகி வரும் இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா, தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் தனது கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜடேஜா தோனியுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, என்னுடைய வாழ்கத்தில் ஒரு நல்ல மனிதனாக 2009 ஆம் ஆண்டு முதல் இன்று வரை என்றும், எப்போதும் உள்ளீர்கள். மஹி பாய் உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். விரைவில் மீண்டும் மஞ்சள் நிற உடையில் சந்திப்போம்.” என பதிவிட்டுள்ளார்.
My go to man since 2009 to till date and forever. Wishing you a very happy birthday mahi bhai.🎂see u soon in yellow💛 #respect pic.twitter.com/xuHcb0x4lS
— Ravindrasinh jadeja (@imjadeja) July 7, 2023
ஜடேஜாவின் அதிரடியால் கோப்பை வென்ற சென்னை:
சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் இலக்கை துரத்திய சென்னை அணிக்கு கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு சிக்ஸரும், ஒரு பவுண்டரியும் அடித்து அணிக்கு திரில் வெற்றியை பெற்றுத் தந்ததில் ரவீந்திர ஜடேஜாவுக்கு முக்கியப் பங்குண்டு.
அணியை வெற்றியாளராக்கிய பிறகு, ரவீந்திர ஜடேஜா தனது இன்னிங்ஸையும், வென்று கொடுத்த கோப்பையையும் எம்.எஸ். தோனிக்கு அர்ப்பணித்தார். ஜடேஜா தோனியுடன் பல புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். அதில் தோனி ஜடேஜாவை தூக்கி வெற்றியை கொண்டாடிய அந்த புகைப்படம் மிக வேகமாக வைரலானது. இப்போது ஜடேஜா ஜூலை 12 முதல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்குவார்.