அஸ்வினுக்கு கொரோனா தொற்று... இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்பாரா?
அஸ்வினுக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கலந்து கொள்வதற்காக இந்திய அணி பயணித்த விமானத்தில் அவர் செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கலந்து கொள்வதற்காக இந்திய அணி பயணித்த விமானத்தில் அவர் செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கலந்து கொள்வதற்காக இந்திய அணி பயணித்த விமானத்தில் அவர் செல்லவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு, இந்திய, இங்கிலாந்து அணிகள் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றன.
நாட்டிங்ஹமில் நடைபெற்ற முதல் போட்டி சமனில் முடிந்தது. இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றன. விறுவிறுப்பாக நடைபெற்ற நான்காவது போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. ஐந்தாவது போட்டி கொரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர், மீதமுள்ள போட்டி இந்தாண்டு ஜூலை 1ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி வீரர்கள் கடந்த ஜூன் 16ஆம் தேதி லண்டன் சென்றனர். அஸ்வினுக்கு கொரோனா உறுதியான நிலையில், அவர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தேவையான வழிமுறைகளையும் பின்பற்றிய பிறகு, அவர் அணியுடன் இணைவார் எனக் கூறப்படுகிறது.
மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற உள்ள இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பிசிசிஐ அலுவலர் ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்பே அஸ்வினுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே, அவர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும், டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக சரியான நேரத்தில் அவர் குணமடைய வேண்டும்" என்றார்.
டெஸ்ட் தொடர் முடிந்ததும் இங்கிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், அதன் பிறகு மூன்று ஒருநாள் போட்டிகள் தொடரிலும் இந்திய அணி விளையாடவுள்ளது. அதற்கு முன், ஜூன் 24 தொடங்கி 28 வரை நடைபெறும் லீசெஸ்டர்ஷைருக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாட இந்திய அணி திட்டமிட்டுள்ளது. அந்த போட்டியில், அஸ்வின் பங்கேற்பது சந்தேகம்தான் எனக் கூறப்படுகிறது.
இதற்கு மத்தியில், பந்துவீச்சி பயற்சியாளர் பராஸ் மாம்ப்ரே மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரின் கண்காணிப்பில் இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். விராட் கோலியிடம் இருந்து நிரந்தர கேப்டன்சி பொறுப்பை பேற்ற பிறகு, ரோகித் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இந்திய அணியை வழிநடத்துவது இதுவே முதல் முறையாகும்.