Ranji Trophy 2024: வரலாற்றில் 2-வது முறை... மும்பை வீரர்கள் தனுஷ் கோட்யான், துஷார் தேஷ்பாண்டே செய்த சாதனை!
10 மற்றும் 11 வது இடத்தில் இறங்கிய மும்பை அணி வீரர்கள் தனுஷ் கோட்யான் மற்றும் துஷார் தேஷ்பாண்டே சதம் விளாசி சாதனை.

ரஞ்சி கோப்பை:
ரஞ்சிக் கோப்பை இந்தியாவின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் கால் இறுதிப் போட்டியில் மும்பை அணியின் 10-வது மற்றும் 11-வது வரிசை வீரர்கள் சதம் அடித்து சாதனை படைத்து இருக்கின்றனர். இதில் 10-வது இடத்தில் இறங்கியவர் தனுஷ் கோட்யான். 11-வது இடத்தில் இறங்கியவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூலம் பிரபலமான துஷார் தேஷ்பாண்டே.
சதம் விளாசிய தனுஷ் கோட்யான் மற்றும் துஷார் தேஷ்பாண்டே:
முன்னதாக கடந்த பிப்ரவரி 23 ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரில் மும்பை மற்றும் பரோடா ஆகிய அணிகள் காலிறுதி போட்டியில் விளையாடியன.அதன்படி, தங்களது முதல் இன்னிங்ஸை தொடங்கிய மும்பை அணி 384 ரன்களை குவித்தது. பின்னர் களம் இறங்கிய பரோடா அணி 34 ரன்களை குவித்தது. இந்நிலையில் தான் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. இதில், தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ஹர்திக் தாமோர் 114 ரன்களை குவித்தார். பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க 337 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்தது மும்பை அணி. அப்போது மும்பை அணியின் பத்து மற்றும் பதினோராம் வரிசை பேட்ஸ்மேன்களான தனுஷ் கோட்யான் மற்றும் துஷார் தேஷ்பாண்டே அதிரடியாக ரன் குவித்தனர்.
Only the 2nd time in the history of first-class cricket, both No.10 and No.11 scored hundreds!
— Kausthub Gudipati (@kaustats) February 27, 2024
Indians vs Surrey, 1946
Chandu Sarwate 124*
Shute Banerjee 121
Mumbai vs Baroda, 2024
Tanush Kotian 109* so far
Tushar Deshpande 111* so far#RanjiTrophy
அந்த வகையில் கடைசி வரை களத்தில் நின்ற தனுஷ் கோட்யான் 129 பந்துகளில் 10 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் என மொத்தம் 120 ரன்களை குவித்தார். இதனிடையே துஷார் தேஷ்பாண்டே 129 பந்துகள் களத்தில் நின்று 10 பவுண்டரிகள் 8 சிக்ஸர்கள் என 123 ரன்களை குவித்தார். கடைசி இரண்டு இடங்களில் களமிறங்கிய பேட்ஸ்மேன்கள் சதம் அடிப்பது முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், கிரிக்கெட் விமர்சகர்களோ இது இரண்டாவது முறை என்று தகவல் அளித்துள்ளனர். அதாவது கடந்த 1946 ஆம் ஆண்டு இந்தியன்ஸ் vs சர்ரே அணிகளுக்கு இடையேயான போட்டியில் 10 மற்றும் 11 வது இடத்தில் களம் இறங்கிய சந்து சர்வதே 124* மற்றும் ஷட் பானர்ஜி 121 ரன்களை குவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Gujarat Giants vs Mumbai Indians: பந்து வீச்சில் மிரட்டிய அமெலியா கெர்...மும்பை அணிக்கு 127 ரன்கள் இலக்கு!
மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!




















