மேலும் அறிய

Worldcup: "இந்தியாவுல பாகிஸ்தான் விளையாடலனா உலகக்கோப்பையை யாரு பாப்பாங்க..?" ரமீஸ்ராஜா ஆணவம்..!

"அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்கவில்லை என்றால், அதை யார் பார்ப்பார்கள்?", என்று ரமீஸ் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்

பாகிஸ்தானில் நடைபெற உள்ள ஆசியக்கோப்பைக்கு இந்தியா செல்லாது என்று ஜெய் ஷா கூறிய நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைவர் ரமீஸ் ராஜா உலகக்கோப்பை போட்டிக்கு வரமாட்டோம் என்று கூறியுள்ளார்.

ஜெய் ஷா கருத்து

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் ஜெய்ஷா கடந்த மாத தொடக்கத்தில், 2023ல் நடைபெறவிருக்கும் ஆசியக் கோப்பைக்கு இந்திய அணி பாகிஸ்தானுக்குச் செல்லாது என்று கூறியிருந்தார், மேலும் மைதானம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தார். ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரான ஜெய் ஷாவின் கருத்து, குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கோபமடைந்தது. பிசிபி தலைவர் ரமீஸ் ராஜா, இந்த விவகாரத்தில் கருத்து கூறாமல் மௌனம் காத்து வந்தார். இந்த நிலையில் ஒரு உருது தொலைக்காட்சி பெட்டியில் தனது மௌனத்தை உடைத்துள்ளார், 

Worldcup:

நடுநிலையான இடத்தில் நடக்கும்

"ஆசியா கோப்பையை நடுநிலையான இடத்தில் நடத்துவதுதான் வழக்கம், நாங்கள் பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டோம் என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்" என்று மும்பையில் பிசிசிஐயின் 91 வது ஆண்டு பொதுக் கூட்டத்திற்குப் பிறகு கடந்த மாதம் ஜெய் ஷா கூறினார். "பாகிஸ்தானுக்குச் செல்லும் எங்கள் அணியின் அனுமதியை அரசாங்கம் தீர்மானிக்கிறது, எனவே நாங்கள் அதைப் பற்றி கருத்துத் தெரிவிக்க மாட்டோம், ஆனால் 2023 ஆசிய கோப்பை போட்டிகள் நடுநிலையான இடத்தில் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது",என்றார்.

தொடர்புடைய செய்திகள்: TN Rain Alert: இன்று எங்கெல்லாம் மழை..? இத்தனை மாவட்டங்களில் எச்சரிக்கையா..? வானிலை மையம் சொன்னது என்ன..?

உலகக்கோப்பைக்கு வரமாட்டோம்

அடுத்த ஆண்டு ஆசியக் கோப்பையை மட்டுமின்றி, பாகிஸ்தான் 2025 இல் சாம்பியன்ஸ் டிராபியையும் நடத்தத் திட்டமிட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பாகிஸ்தான் நாட்டிற்குதிரும்பியதிலிருந்து, சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் திட்டமிடப்படும் முதல் ICC நிகழ்வாகும். உருது செய்திகளிடம் பேசிய ரமிஸ், பிசிசிஐ மற்றும் இந்திய அணியை சரமாரியாக விமர்சித்தார். ஆசிய கோப்பைக்கு இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், பாகிஸ்தான் அடுத்த உலகக் கோப்பைக்கு இந்தியாவுக்கு பயணம் செய்ய மாட்டார்கள் என்று கூறினார்.

Worldcup:

யார் பார்ப்பார்கள்?

மேலும் பேசிய அவர், "அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்கவில்லை என்றால், அதை யார் பார்ப்பார்கள்? நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இந்திய அணி இங்கு வந்தால் நாங்கள் உலகக் கோப்பைக்கு செல்வோம். அவர்கள் வரவில்லை என்றால் நாங்கள் இல்லாமல் உலகக் கோப்பையை விளையாடலாம்.

எங்கள் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. பாகிஸ்தான் கிரிக்கெட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன், அது நாம் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே நடக்கும். 2021 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்தினோம். டி20 ஆசிய கோப்பையில் இந்தியாவை வீழ்த்தினோம். ஒரு வருடத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரு பில்லியன் டாலர் ஈட்டும். இந்திய அணியை இரண்டு முறை தோற்கடித்தது,” என்று அவர் கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Metro: நாளை முதல் கூடுதலாக மெட்ரோ ரயில் இயக்கம்; எவ்வளவு நேர இடைவெளி? கடைசி மெட்ரோ எப்போது ?
நாளை முதல் கூடுதலாக மெட்ரோ ரயில் இயக்கம்; எவ்வளவு நேர இடைவெளி? கடைசி மெட்ரோ எப்போது ?
TN Rain News LIVE: கனமழைக்கு தயாரான சென்னை.. 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. மக்களே கவனம்!
TN Rain News LIVE: கனமழைக்கு தயாரான சென்னை.. 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. மக்களே கவனம்!
சார் பைன் கூட போடுங்க... வேளச்சேரியில் விடாபடியாக இருக்கும் மக்கள்! தலைவலியில் போலீஸ்..
சார் பைன் கூட போடுங்க... வேளச்சேரியில் விடாபடியாக இருக்கும் மக்கள்! தலைவலியில் போலீஸ்..
Chennai Red Alert: தாக்குப் பிடிக்குமா சென்னை விமான நிலையம்? - அதிகாரிகள் செய்யப் போவது என்ன?
தாக்குப் பிடிக்குமா சென்னை விமான நிலையம்? - அதிகாரிகள் செய்யப் போவது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kallakurichi : கள்ளச்சாராய விற்பனை ஜோர் கள்ளக்குறிச்சியில் மீண்டும் பகீர்.. ஆக்‌ஷனில் இறங்கிய POLICETVK Maanadu : 234 தொகுதிக்கும் ரெடி! மாஸ் காட்டும் விஜய்! TVK பக்கா ப்ளான்Chennai rain : நாங்க ரெடி! நீங்க ரெடியா? புரட்டி போடப்போகும் மழை! சென்னை மாநகராட்சி அட்வைஸ்Prisoners Ramayana | சிறையில் ராமாயண நாடகம்! சீதையை தேடுவது போல் எஸ்கேப்! கம்பி நீட்டிய வானர கைதிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Metro: நாளை முதல் கூடுதலாக மெட்ரோ ரயில் இயக்கம்; எவ்வளவு நேர இடைவெளி? கடைசி மெட்ரோ எப்போது ?
நாளை முதல் கூடுதலாக மெட்ரோ ரயில் இயக்கம்; எவ்வளவு நேர இடைவெளி? கடைசி மெட்ரோ எப்போது ?
TN Rain News LIVE: கனமழைக்கு தயாரான சென்னை.. 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. மக்களே கவனம்!
TN Rain News LIVE: கனமழைக்கு தயாரான சென்னை.. 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. மக்களே கவனம்!
சார் பைன் கூட போடுங்க... வேளச்சேரியில் விடாபடியாக இருக்கும் மக்கள்! தலைவலியில் போலீஸ்..
சார் பைன் கூட போடுங்க... வேளச்சேரியில் விடாபடியாக இருக்கும் மக்கள்! தலைவலியில் போலீஸ்..
Chennai Red Alert: தாக்குப் பிடிக்குமா சென்னை விமான நிலையம்? - அதிகாரிகள் செய்யப் போவது என்ன?
தாக்குப் பிடிக்குமா சென்னை விமான நிலையம்? - அதிகாரிகள் செய்யப் போவது என்ன?
மீனவர்களே உஷார்... மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு போக வேண்டாம்... புயல் காற்று அடிக்குமாம்
மீனவர்களே உஷார்... மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு போக வேண்டாம்... புயல் காற்று அடிக்குமாம்
”பயப்பட வேண்டாம்”: சென்னையில் எந்த நேரத்தில் மழை பெய்யும்: துல்லியமாக விளக்கிய வானிலை மைய இயக்குநர்
”பயப்பட வேண்டாம்”: சென்னையில் எந்த நேரத்தில் மழை பெய்யும்: துல்லியமாக விளக்கிய வானிலை மைய இயக்குநர்
Nobel Prize 2024: பொருளாதாரத்துக்கான நோபல் 3 பேருக்குக் கூட்டாக அறிவிப்பு; யாருக்கு ஏன்?
Nobel Prize 2024: பொருளாதாரத்துக்கான நோபல் 3 பேருக்குக் கூட்டாக அறிவிப்பு; யாருக்கு ஏன்?
வேளச்சேரி மக்கள் உஷார் தான் போல.. விழுந்த அடி அப்படி.. பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்கள் - காரணம் என்ன?
வேளச்சேரி மக்கள் உஷார் தான் போல.. விழுந்த அடி அப்படி.. பாலத்தில் நிறுத்தப்பட்ட கார்கள் - காரணம் என்ன?
Embed widget