மேலும் அறிய

IND VS ENG TEST: இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட்...ரஜத் பட்டிதரை விடுவிக்க பிசிசிஐ முடிவு?

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரஜத் பட்டிதரை பிசிசிஐ விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

5-வது டெஸ்ட் போட்டி:

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் விளையாடி வருகிறதுஅதன்படிமுதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுஇதனிடையேஇந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி  குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், பிப்ரவரி 23 ஆம் தேதி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.  இதில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை  வென்றது. அந்தவகையில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 3-1 என்ற கணக்கில் தனது சொந்த நாட்டில் நடைபெறும் டெஸ்ட் தொடரை இந்திய அணி  வென்றுள்ளது. கடைசி மற்றும் 5 வது டெஸ்ட் போட்டி மார்ச் 7 ஆம் தேதி தொடங்க உள்ளது.

ரஜத் பட்டிதரை நீக்க பிசிசிஐ முடிவு?

முன்னதாக இந்த தொடரில் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்  ரஜத் படிதர். அந்த வகையில் தான் விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாகவே 63 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இச்சூழலில் ரசிகர்கள் பலரும் இவரை சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். அதன்படி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 72 பந்துகளில் 32 ரன்களை எடுத்தார்ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதேபோல், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 5 ரன்கள் மட்டுமே எடுத்த இவர் இரண்டாவது இன்னிங்ஸில் டக் அவுட் முறையில் வெளியேறினார்.

இவ்வாறு சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஜத் படிதர் நான்காவது டெஸ்ட் போட்டியிலாவது சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அந்த போட்டியிலும் சொதப்பலாகவே செயல்பட்டார். அந்தவகையில் நான்காவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் 17 ரன்களை மட்டுமே எடுத்த ரஜத் படிதர் 2-வது இன்னிங்ஸில் டக் அவுட் ஆகி வெளியேறினார்இதனால் சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் இவரது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதுஇச்சூழலில், கே.எல்.ராகுலுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட ரஜத் படிதர் 5-வது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்படலாம் என்று பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், கே.எல்.ராகுல் முழுமையான உடற்தகுதியை அடைந்ததால் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி போட்டியில் அவர் களம் இறங்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!

மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS: சர்வே எடுக்கப்போகும் எடப்பாடியார்.. இபிஎஸ் ஏன் இப்படி பண்றாரு தெரியுமா?
EPS: சர்வே எடுக்கப்போகும் எடப்பாடியார்.. இபிஎஸ் ஏன் இப்படி பண்றாரு தெரியுமா?
China On Trump: ”நாங்க ஒன்னும் போருக்கு பிளான் போட்றவங்க கிடையாது” - ட்ரம்புக்கு சீனா பதிலடி
China On Trump: ”நாங்க ஒன்னும் போருக்கு பிளான் போட்றவங்க கிடையாது” - ட்ரம்புக்கு சீனா பதிலடி
Hybrid 7 Seater Car: ஹைப்ரிட் இன்ஜினுடன் மாஸ் காட்டும் 7 சீட்டர்கள்.. டொயோட்டா, ஹூண்டாயின் அட்டகாசமான மாடல்கள்
Hybrid 7 Seater Car: ஹைப்ரிட் இன்ஜினுடன் மாஸ் காட்டும் 7 சீட்டர்கள்.. டொயோட்டா, ஹூண்டாயின் அட்டகாசமான மாடல்கள்
TVK Vijay DMK: திருச்சியில் மாஸ் காட்டிய விஜய்.. ”கேட்கல, பாக்கல.. படிச்சுட்டு வாங்க” திமுக அமைச்சர்கள் பதிலடி
TVK Vijay DMK: திருச்சியில் மாஸ் காட்டிய விஜய்.. ”கேட்கல, பாக்கல.. படிச்சுட்டு வாங்க” திமுக அமைச்சர்கள் பதிலடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Seerkazhi Govt Hospital : தரையில் உறங்கும் நோயாளிகள்படுக்கைகள் பற்றாக்குறை!அரசு மருத்துவமனையில் அவலம்
விதியை மீறினாரா ராகுல்? வெளிநாட்டு பயண சீக்ரெட்! பற்றவைத்த பாஜக
”EX IPS-னு போடுங்க போதும்” பாஜகவை ERASE செய்த அண்ணாமலை? டெல்லி மீட்டிங் TO அறிக்கை
Nainar Nagendran | நயினார் டெல்லி விசிட் அமித்ஷாவை சந்திக்க திட்டம் முடிவுக்கு வரும் KAS  விவகாரம்?
Sushila Karki : நேபாளின் அடுத்த பிரதமர்?ரேஸில் இந்திய மாணவி..யார் இந்த சுசீலா கார்கி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: சர்வே எடுக்கப்போகும் எடப்பாடியார்.. இபிஎஸ் ஏன் இப்படி பண்றாரு தெரியுமா?
EPS: சர்வே எடுக்கப்போகும் எடப்பாடியார்.. இபிஎஸ் ஏன் இப்படி பண்றாரு தெரியுமா?
China On Trump: ”நாங்க ஒன்னும் போருக்கு பிளான் போட்றவங்க கிடையாது” - ட்ரம்புக்கு சீனா பதிலடி
China On Trump: ”நாங்க ஒன்னும் போருக்கு பிளான் போட்றவங்க கிடையாது” - ட்ரம்புக்கு சீனா பதிலடி
Hybrid 7 Seater Car: ஹைப்ரிட் இன்ஜினுடன் மாஸ் காட்டும் 7 சீட்டர்கள்.. டொயோட்டா, ஹூண்டாயின் அட்டகாசமான மாடல்கள்
Hybrid 7 Seater Car: ஹைப்ரிட் இன்ஜினுடன் மாஸ் காட்டும் 7 சீட்டர்கள்.. டொயோட்டா, ஹூண்டாயின் அட்டகாசமான மாடல்கள்
TVK Vijay DMK: திருச்சியில் மாஸ் காட்டிய விஜய்.. ”கேட்கல, பாக்கல.. படிச்சுட்டு வாங்க” திமுக அமைச்சர்கள் பதிலடி
TVK Vijay DMK: திருச்சியில் மாஸ் காட்டிய விஜய்.. ”கேட்கல, பாக்கல.. படிச்சுட்டு வாங்க” திமுக அமைச்சர்கள் பதிலடி
பீர், ஹீரோயின் கிசுகிசு.. முதலமைச்சர் முன்பு அரசு விழாவில் இப்படியா பேசுறது ரஜினி?
பீர், ஹீரோயின் கிசுகிசு.. முதலமைச்சர் முன்பு அரசு விழாவில் இப்படியா பேசுறது ரஜினி?
டிமாண்ட் இல்ல..எகிறிய பட்ஜெட்...ஓடிடி பஞ்சாயத்து...சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தாமதத்திற்கு இதான் காரணம்
டிமாண்ட் இல்ல..எகிறிய பட்ஜெட்...ஓடிடி பஞ்சாயத்து...சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தாமதத்திற்கு இதான் காரணம்
Top 10 News Headlines: வானிலை மையம் எச்சரிக்கை, தங்கம் வென்ற இந்தியர், ட்ரம்பிற்கு சீனா பதிலடி  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: வானிலை மையம் எச்சரிக்கை, தங்கம் வென்ற இந்தியர், ட்ரம்பிற்கு சீனா பதிலடி - 11 மணி வரை இன்று
"மயிலாடுதுறை விவசாயிகள் கண்ணீர்" மீண்டும் மீண்டும் மழையில் நனைந்து  பாழாகும் நெல் மூட்டைகள் - கண்டுகொள்ளாத அரசு..!
Embed widget