Rahul Tewatia Tweet : "எதிர்பார்ப்புகள் நொறுங்கியது..."..! இந்திய அணியில் இடம் கிடைக்காததால் நொந்துபோன ராகுல்..
இந்திய அணியில் இடம் கிடைக்காதது வலியை ஏற்படுத்தியுள்ளதாக ராகுல் திவேதியா வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
அயர்லாந்து அணியுடன் மோதும் இந்திய அணியை நேற்று பிசிசிஐ அறிவித்தது. இந்திய அணிக்கு முதன்முறையாக ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடரில் ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக ஆடிய ராகுல் திரிபாதிக்கு முதன்முறையாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்க தொடரில் இடம்பெற்ற இதர வீரர்கள் இந்த தொடரிலும் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில், இந்திய அணியில் இடம் கிடைக்காதது ஏமாற்றம் அளிப்பதாக இளம் கிரிக்கெட் வீரர் ராகுல் திவேதியா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். எதிர்பார்ப்புகள் வலியை ஏற்படுத்திவிட்டதாக ராகுல் திவேதியா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Expectations hurts 😒😒
— Rahul Tewatia (@rahultewatia02) June 15, 2022
ஐ.பி.எல். மூலம் இந்தியாவில் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ராகுல் திவேதியாவும் ஒருவர் ஆவார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கடந்த சில சீசன்களாக ஆடிய ராகுல் திவேதியா, கடந்த சீசனில் சாம்பியன் அணியான குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஆடினர். அவரின் சிறப்பான ஆட்டத்தால் குஜராத் அணி பல போட்டிகளில் வெற்றி பெற்றது. குறிப்பாக, பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி 2 பந்தில் 12 ரன்கள் தேவை என்ற சூழலில் ஓடீன் ஸ்மித் பந்தில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு குஜராத்தை திரில் வெற்றி பெற வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்க தொடரிலே ராகுல் திவேதியாவிற்கு அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த சூழலில், அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால், அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அவரும், அவரது ரசிகர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், அவருக்கு வாய்ப்பு கிடைக்காதது அவருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
29 வயதான ராகுல் திவேதியா ஐ.பி.எல், தொடரில் 64 போட்டிகளில் ஆடி 738 ரன்களை விளாசியுள்ளார். மேலும், 32 விக்கெட்டுகளையுள் வீழ்த்தியுள்ளார். கடந்த சீசனில் மட்டும் ராகுல் திவேதியா 16 போட்டிகளில் 12 இன்னிங்சில் பேட்டிங் செய்து 217 ரன்களை எடுத்திருந்தார். அதிகபட்சமாக 43 ரன்களை எடுத்திருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்