Watch Video: 'கடவுள் மனசுக்காரர் குர்பாஸ்' சாலையோர மக்களுக்கு தீபாவளி பரிசாக பணம் தந்த ஆப்கான் வீரர்
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் குர்பாஸ் சாலையோரம் படுத்திருந்த மக்களுக்கு தீபாவளி பண்டிகைக்காக பணம் அன்பளிப்பாக அளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகின் தற்போதைய ஜாம்பவான் அணிகளுக்கு எல்லாம் சவால் அளிக்கும் அணியாக வளர்ந்து நிற்கும் அணி எதுவென்றால், சந்தேகமின்றி அது ஆப்கானிஸ்தான் என்று சொல்லலாம். நடப்பு உலகக்கோப்பையில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன்கள் பாகிஸ்தான், இலங்கை அணியை அவர்கள் பதம் பார்த்தது மட்டுமின்றி ஆஸ்திரேலிய அணியையே 91 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டியும் அசத்தினர். அவர்கள் நாட்டின் மோசமான நிலையிலும், தங்கள் நாட்டிற்காக சிறப்பாக ஆடும் அவர்களது கிரிக்கெட்டை ரசிகர்கள் பாராட்டியே வருகின்றனர்.
குர்பாஸின் தங்க குணம்:
இந்தியாவிலும், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அந்த அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் ரஹ்மதுல்லா குர்பாஸ். அகமதபாத்தில் தங்கள் அணியினடருன் தங்கியிருந்த குர்பாஸ், அதிகாலையில் அங்குள்ள பகுதியில் சாலையோரத்தில் படுத்திருந்த மக்களுக்கு பணம் கொடுத்து உதவிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த பகுதியில் பிரபல வானொலி தொகுப்பாளர் ஆர்.ஜே.லவ்ஷா தங்கியுள்ளார். அப்போது, அதிகாலை 3 மணியளவில் அவரது வீட்டின் அருகே ஒருவர் படுத்திருக்கும் ஒவ்வொரு நபரின் அருகிலும் பணத்தை வைத்துக் கொண்டு செல்வதை பார்த்துள்ளார். அப்போதுதான். ஒரு பெண் கை காட்ட அங்கு படுத்திருக்கும் நபர்களுக்கு பணத்தை வைத்த நபர் பிரபல கிரிக்கெட் வீரர் ரஹ்மதுல்லா குர்பாஸ் என்பதை பார்த்துள்ளார்.
Rahmanullah Gurbaz silently gave money to the needy people on the streets of Ahmedabad so they could celebrate Diwali.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 12, 2023
- A beautiful gesture by Gurbaz. pic.twitter.com/6HY1TqjHg4
பின்னர், இந்த சம்பவத்தை அவர் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தலிபான்கள் முன்பு ஆட்சி நடத்தியபோதும், தலிபான்களின் தற்போதைய ஆட்சியிலும் ஆப்கானிஸ்தான் நாடு எந்த நிலையில் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே ஆகும். அதனால், அந்த அணியில் ஆடும் அத்தனை வீரர்களும் தங்கள் நாட்டு மக்கள் படும் துயரங்களை நன்றாகவே அறிந்தவர்கள்.
குவியும் வாழ்த்து:
அதன்காரணமாக, குர்பாஸ் அகமதாபாத்தில் சாலையோரத்தில் படுத்திருந்த மக்களுக்கு அவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக அவர்களுக்கு பணத்தை அன்பளிப்பாக அளித்துள்ளார். குர்பாஸின் இந்த செயலுக்கு ரசிகர்களும், பொதுமக்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பலரும் நெகிழ்ச்சியுடன் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
குர்பாஸ் இந்த உலகக் கோப்பைத் தொடரில் 9 போட்டிகளில் ஆடி 280 ரன்களை எடுத்துள்ளார். 21 வயதே ஆன ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய வீரர் ஆவார். 35 ஒருநாள் போட்டிகளில் இதுவரை ஆடியுள்ள அவர் 5 சதங்கள், 4 அரைசதங்களுடன் 1238 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 151 ரன்கள் எடுத்துள்ளார். 43 டி20 போட்டிகளில் ஆடி 5 அரைசதங்களுடன் 1043 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 87 ரன்கள் எடுத்துள்ளார். உலகக் கோப்பைத் தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் அணி வெளியேறினாலும், மக்களின் உள்ளங்களில் இடம்பிடித்துள்ளனர் என்பதே உண்மை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: eam of the World Cup 2023: ரோஹித் இல்லை, கோலிதான் கேப்டன் - 4 இந்தியர்கள் உட்பட 11 பேர் கொண்ட உலகக்கோப்பை அணி - ஆஸ்திரேலியா
மேலும் படிக்க: World Cup 2023 Stats: முடிந்தது உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் சுற்று - இதுவரை பேட்டிங், பவுலிங்கில் அசத்தியது யார்?