Watch Video: நீ படிச்ச School-ல நா Headmaster டா..பவுலருக்கு பாடம் எடுத்த அஸ்வின்!
திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணி விளையாடிய போது அஸ்வினுக்கு மன்கட் அலர்ட் கொடுத்தார் மோகன் பிரசாந்த்.

தமிழ்நாடு ப்ரீமியர் லீக்:
8 அணிகள் பங்கேற்ற தமிழ்நாடு ப்ரீமியர் லீக் டி20 போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இதில் கடைசி லீக் போட்டி நேற்று(ஜூலை 28) நடைபெற்றது. திண்டுக்கல் அணிக்கு எதிரான இந்த போட்டியில் நெல்லை அணி வெற்றி பெற்றது.
முன்னதாக இந்த போட்டியின் 15 வது ஓவரில் திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அந்த ஓவரை வீசிய மோகன் பிரசாந்த் அஸ்வினை மன்கட் ரன் அவுட் முறையை கையாண்டு அவுட் செய்ய முயற்சி செய்தார். ஆனால் அஸ்வின் வெள்ளைக்கோட்டுக்குள் பேட்டை வைத்திருந்ததால் அவரால் அவுட் செய்ய முடியவில்லை. இந்த போட்டியின் வர்ணனையின் போதும்,"அஸ்வினுக்கேவா? ஒருவேளை ஸ்டம்ப்பில் அடித்திருந்தால் அஸ்வின் அவுட்டாகியிருப்பார்”என்று கூறினார்கள்.
நீ படிச்ச School-ல நா Headmaster டா:
இது தொடர்பான வீடியோவிற்கு பிரசன்னா என்பவர்,எச்சரிக்கை என்ற சொல் வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறி சாதகத்தை பெற முயற்சிக்கும் பேட்ஸ்மேனுக்கு மட்டுமே பொருந்தும். இங்கே அஸ்வினுக்கு அது பொருந்தும் என்று நான் நினைக்கவில்லை”என்று கூறியிருந்தார். இதை பார்த்த ரசிகர் ஒருவர், "சரியாகச் சொன்னீர்கள். பந்தை ரிலீஸ் செய்யும் போது அஸ்வின் கோட்டுக்குள் இருந்தார் என்ற உண்மையை ஏன் வர்ணனையாளர்கள் சொல்லவில்லை”என்று பதிவிட்டிருந்தார்.
Ash அண்ணா be like : நீ படிச்ச School-ல நா Headmaster டா! 😎😂
— Star Sports Tamil (@StarSportsTamil) July 28, 2024
📺 தொடர்ந்து காணுங்கள் TNPL | Dindigul Dragons vs Nellai Royal Kings | Star Sports தமிழில் மட்டும்#TNPLOnStar #TNPL2024 #NammaOoruNammaGethu @TNPremierLeague pic.twitter.com/fI97alqNJl
இந்த நிலையில் தான் ரசிகரின் கருத்துக்கு அஸ்வின் பதில் கொடுத்துள்ளார். அதாவது அஸ்வின் வெளியிட்டுள்ள பதிவில், "ஏனெனில் அவர்களுக்கு விதிமுறை தெரியவில்லை"என்று கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க: Lakshya sen: இந்தியர்கள் அதிர்ச்சி..! ஒலிம்பிக்கில் நடந்த மோசம்? பேட்மிண்டன் வீரர் லக்க்ஷயா சென்னின் வெற்றியை நீக்கி அறிவிப்பு
மேலும் படிக்க:Paris 2024 Olympics: ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்பவர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு பரிசு..! பெட்டியில் இருப்பது என்ன தெரியுமா?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

