Points Table TNPL 2023: ஆணி அடித்தாற்போல் முதலிடத்தில் கோவை.. முன்னேறிய மதுரை.. எந்த அணி எந்த இடம்? ஒரு பார்வை..!
நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள மதுரை அணி இரண்டு வெற்றியுடன் -0.350 நிகர ரன் ரேட்டுடன் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் 2023 தொடரானது கடந்த ஜூன் 12ம் தேதி தொடங்கி வருகின்ற ஜூலை12ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இந்தநிலையில், ஜூன் 26ம் தேதியான நேற்று சேலத்தில் உள்ள எஸ்சிஎஃப் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் சிசெம் மதுரை பாந்தர்ஸ் அணி வீழ்த்தியது.
இந்த சீசனில் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள மதுரை அணி இரண்டு வெற்றியுடன் -0.350 நிகர ரன் ரேட்டுடன் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேபோல், நேற்றைய போட்டியில் தோல்வியை சந்தித்தாலும் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 4 தோல்விகளுடன் 4வது இடத்தில் உள்ளது.
டிஎன்பிஎல் புள்ளி அட்டவணையில் லைகா கோவை கிங்ஸ் அணி இதுவரை 5 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் எட்டு புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் ஐந்து ஆட்டங்களில் நான்கு வெற்றிகள் மற்றும் நிகர ரன் ரேட் +0.558 உடன் உள்ளது. நான்கு போட்டிகள் விளையாடியுள்ள திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 3 வெற்றிகளுடன் 3வது இடத்தில் உள்ளது.
ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களில் இரண்டில் வெற்றியும், இரண்டில் தோல்வியும் பெற்று புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. 4 போட்டிகளில் ஒரே வெற்றியுடன் சேலம் அணி 7வது இடத்திலும், 4 போட்டிகளில் விளையாடி 4 லிலும் தோல்வியடைந்த திருச்சி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
TNPL 2023 புள்ளிகள் அட்டவணை
எண் |
---|
1 |
2 |
3 |
4 |
5 |
6 |
7 |
8 |
போட்டி சுருக்கம்:
சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியும் மதுரை பாந்தர்ஸ் அணியும் நேற்று இரவு மோதிக்கொண்டன. முதலில் டாஸ் வென்ற சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன் அடிப்படையில் முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய மதுரை பந்தார்ஸ் அணி, 9.4 ஓவர்களில் 50/6 என்ற மோசமான நிலையை சந்தித்தது. அடுத்ததாக ஏழாவது இடத்தில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 30 பந்துகளில் 56 ரன்கள் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்தது.
142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக்கம் சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.