Points Table TNPL 2023: முதல் இடத்திற்கு தாவிய கோவை.. அசத்திய திருப்பூர்.. டி.என்.பி.எல் புள்ளிப் பட்டியலில் எந்த அணி எந்த இடம்..?
திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் லைகா கோவை கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக்கின் ஞாயிற்றுக்கிழமையான நேற்று இரண்டு போட்டிகள் நடைபெற்றது. மாலை நடந்த போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. அதேபோல், இரவு நடந்த போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி, பா11சி திருச்சியை வீழ்த்தியது. இரண்டு போட்டிகளும் சேலத்தின் உள்ள எஸ்சிஎஃப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் லைகா கோவை கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ரன் ரேட் அடிப்படையில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 4 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர். கோவை கிங்ஸின் நிகர ரன் விகிதம் +1.763 ஆகவும், ராயல் கிங்ஸ் நிகர ரன் ரேட் +0.558 ஆகவும் உள்ளது.
தமிழ்நாடு பிரிமீயர் லீக் 2023 தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதல் தோல்வியை சந்தித்து மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 5 போட்டிகளில் விளையாடியுள்ள சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் 2 வெற்றி 3 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
TNPL 2023 புள்ளிகள் அட்டவணை
எண் |
---|
1 |
2 |
3 |
4 |
5 |
6 |
7 |
8 |
ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் இந்த தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளனர். 6வது இடத்தில் இரண்டு புள்ளிகளை மட்டுமே பெற்று சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணி இருக்கிறது. சேலம் ஸ்பார்டன்ஸ் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி, 3தோல்விகளுடன் 7வது இடத்திலும், ஒரு வெற்றியை கூட பெறாத பா11சி திருச்சி அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
நேற்றைய போட்டி சுருக்கம்:
தமிழ்நாடு பிரீமியர் லீக் 2023ன் 17வது போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ்ம் பா11சி திருச்சியை எதிர்கொண்டது. சாய் கிஷோர் 50 மற்றும் பால்சந்தர் அனிருத் 51 ஆகியோர் அரைசதம் அடிக்க, திருப்பூர் அணி 20 ஓவர் முடிவில் 201 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய திருச்சி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 46 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் அணி வெற்றிபெற்றது.
16வது போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் மோதியது. சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடி 83 ரன்கள் குவிக்க, 20 ஓவர்கள் முடிவில் கோவை அணி 206 ரன்கள் குவித்தது. அதன் பிறகு களமிறங்கிய திண்டுக்கல் அணி 147 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி எதிரான போட்டியில் கோவை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.