17 ஆண்டு கால கனவை நினைவாக்கிய இந்தியா! பிரதமர், முதல்வர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
இந்திய நாட்டிற்கே பெருமையை தேடி தந்துள்ள இந்திய அணியினருக்கு ஒட்டுமொத்த நாடும் தலை வணங்குகிறது
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
டி20 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டி இந்தியாவுக்கு தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையே நடைபெற்றது. இதில் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.
இதில் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்புகளை அளித்து விளையாட்டை சுவாரஸ்யமாக்கினர்.
இந்நிலையில், வெற்றி பெற்ற இந்திய அணிக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தனது எக்ஸ் பக்கத்தில், “டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒருபோதும் இறக்காத மனப்பான்மையுடன், கடினமான சூழ்நிலைகளில் பயணம் செய்த அணி, போட்டி முழுவதும் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியது. இறுதிப் போட்டியில் இது ஒரு அசாதாரண வெற்றியாகும். நல்லது, இந்திய அணி! நாங்கள் உன்னால் பெருமை அடைகிறோம்!” எனத் தெரிவித்தார்.
CHAMPIONS!
— Narendra Modi (@narendramodi) June 29, 2024
Our team brings the T20 World Cup home in STYLE!
We are proud of the Indian Cricket Team.
This match was HISTORIC. 🇮🇳 🏏 🏆 pic.twitter.com/HhaKGwwEDt
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், எங்கள் அணி டி20 உலகக் கோப்பையை ஸ்டைலில் வீட்டிற்கு கொண்டு வருகிறது! இந்திய கிரிக்கெட் அணிக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த போட்டி வரலாற்று சிறப்புமிக்கது” எனத் தெரிவித்துள்ளார்.
Thrilled to celebrate our #MenInBlue for clinching their second #T20WorldCup with complete dominance!
— M.K.Stalin (@mkstalin) June 29, 2024
Our Indian team showcased unparalleled brilliance in challenging conditions, finishing with an unbeaten record.
Congratulations, Team India! 🇮🇳🏆#INDvSA pic.twitter.com/DlYX2fXfcm
இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ”எங்கள் #MenInBlue அவர்களின் இரண்டாவது #T20 உலகக் கோப்பையை முழுமையான ஆதிக்கத்துடன் வென்றதற்காக கொண்டாடுவதில் மகிழ்ச்சி!
நமது இந்திய அணி சவாலான சூழ்நிலைகளில் இணையற்ற திறமையை வெளிப்படுத்தி, முறியடிக்க முடியாத சாதனையுடன் முடித்தது. வாழ்த்துகள், இந்திய அணி” எனத் தெரிவித்துள்ளார்.
கடும் நெருக்கடிகளை கடந்து ஆட்டத்தை வென்றெடுத்து இறுதியில் உலக கோப்பையை உறுதி செய்துள்ளது இந்திய அணி!
— DJayakumar (@djayakumaroffcl) June 29, 2024
மதம்-இனம் கடந்து இந்திய நாட்டிற்காக வியர்வை சிந்தி விளையாடி கனவுக்கோப்பையை கைப்பற்றி களத்தில் கண்ணீர் சிந்தியுள்ளனர் இந்திய வீரர்கள்!
இந்திய நாட்டிற்கே பெருமையை தேடி தந்துள்ள… pic.twitter.com/zoeaajmRqk
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் “கடும் நெருக்கடிகளை கடந்து ஆட்டத்தை வென்றெடுத்து இறுதியில் உலக கோப்பையை உறுதி செய்துள்ளது இந்திய அணி!
மதம்-இனம் கடந்து இந்திய நாட்டிற்காக வியர்வை சிந்தி விளையாடி கனவுக்கோப்பையை கைப்பற்றி களத்தில் கண்ணீர் சிந்தியுள்ளனர் இந்திய வீரர்கள்!
இந்திய நாட்டிற்கே பெருமையை தேடி தந்துள்ள இந்திய அணியினருக்கு ஒட்டுமொத்த நாடும் தலை வணங்குகிறது!” எனத் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:
And India lifts the #T20WorldCup for its second time, after 17 Years!
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) June 29, 2024
Congratulations to @ImRo45 and #TeamIndia for the showcase of magnificence throughout the tournament.
The finals saw one of the best Death Overs bowling of all time, and what a catch that was by #SKY !… pic.twitter.com/qoZ4cfqSLE