மேலும் அறிய

Shaheen Afridi: மீண்டும் திருமணம் செய்யபோகும் ஷாஹீன் அப்ரிடி.. ஆசியக் கோப்பை முடிந்ததும் கல்யாண கொண்டாட்டம்!

ஆசியக் கோப்பை 2023க்குப் பிறகு, பாகிஸ்தானின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி மீண்டும் திருமணம் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசியக் கோப்பை 2023க்குப் பிறகு, பாகிஸ்தானின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி மீண்டும் திருமணம் செய்ய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடியின் மகள் அன்ஷாவை ஷாஹீன் திருமணம் செய்து கொண்டார். தற்போது மீண்டும் அன்ஷாவை திருமணம் செய்யவுள்ளார்.

ஷாகின் அப்ரிடிக்கு கல்யாணம்:

அதன்படி, அப்ரிடியின் மகள் அன்ஷாவை ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, அதாவது செப்டம்பர் 19 அன்று ஷாஹீன் மீண்டும் திருமணம் செய்து கொள்வார். 

ஷாஹீன் அப்ரிடி திருமணத்தின்போது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். பெரிதாக யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. இருப்பினும், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் துணை கேப்டன் ஷதாப் கான் போன்ற வீரர்களும் திருமணத்திற்கு வந்து வாழ்த்து தெரிவித்து சென்றனர். இந்த புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்த நிலையில், இப்போது இரண்டாவது முறையாக, ஷாஹீனும் அன்ஷாவும் தங்கள் திருமணத்தை சிறப்பாகவும், பிரமாண்டமாகவும்  கொண்டாட விரும்புகிறார்கள். இதையடுத்து, ஷாஹீனின் திருமண ஊர்வலம் செப்டம்பர் 19 அன்று நடைபெறும் என்றும், அதன் பின்னர் வரவேற்பு செப்டம்பர் 21 அன்று நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஷாஹீன் மற்றும் அன்ஷா இந்த ஆண்டு பிப்ரவரியில் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆசிய கோப்பையில் கலக்கி வரும் ஷாஹீன்:

ஆசிய கோப்பைக்காக ஷாஹீன் அப்ரிடி தற்போது இலங்கை வந்துள்ளார். இப்போட்டியில் சூப்பர்-4 போட்டிகள் நடைபெற்று வருகின்றன, இதில் முதல் போட்டி மட்டும் பாகிஸ்தானில் நடைபெற்றது. மீதமுள்ள அனைத்து போட்டிகளும் இலங்கையின் கொழும்பில் நடைபெறும். பாகிஸ்தான் அணி அடுத்த போட்டியில் இந்தியாவை செப்டம்பர் 10ஆம் தேதி சந்திக்கிறது. 

தற்போது, ​​ஆசிய கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஷாஹீன் மூன்றாவது இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி இதுவரை 3 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதில் அவரது சிறந்த 4/35 இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வந்தது.

இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான ரிசர்வ் நாள்

குரூப் ஸ்டேஜில் ஆடிய இந்தியா-பாகிஸ்தான் போட்டி மழையால் ரத்தானது. அதே நேரத்தில், சூப்பர்-4-ல் இருவருக்கும் இடையேயான போட்டியின் மீது மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. அதைக் கருத்தில் கொண்டு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ரிசர்வ் டே வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK Protest: ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
HMPV: எச்.எம்.பி.வி. வைரசுக்கும், கொரோனா வைரசுக்கும் இத்தனை ஒற்றுமையா? இதைப் படிங்க!
HMPV: எச்.எம்.பி.வி. வைரசுக்கும், கொரோனா வைரசுக்கும் இத்தனை ஒற்றுமையா? இதைப் படிங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“இது கூட தெரியாதா விஜய்” கலாய்க்கும் திமுகவினர்திருப்பி அடிக்கும் தவெகவினர்!TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Protest: ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஆளுநரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்... சேலத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
UGC Draft Regulations: அமைதியாக இருக்க மாட்டோம்; யுஜிசிக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை- விவரம்!
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
டங்ஸ்டன் சுரங்கம் கூடவே, கூடாது.. கடல் அலைபோல் திரண்ட மக்கள்; மதுரையை நோக்கி பேரணியாக கிளம்பினர்
HMPV: எச்.எம்.பி.வி. வைரசுக்கும், கொரோனா வைரசுக்கும் இத்தனை ஒற்றுமையா? இதைப் படிங்க!
HMPV: எச்.எம்.பி.வி. வைரசுக்கும், கொரோனா வைரசுக்கும் இத்தனை ஒற்றுமையா? இதைப் படிங்க!
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
Embed widget