SL vs PAK : இரட்டை சதம் விளாசிய பாகிஸ்தான் வீரர் சௌத் ஷகீல்.. பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்குமா இலங்கை
SL vs PAK: இலங்கை பந்து வீச்சாளர்களை பந்தை சிதறடித்து பாகிஸ்தான் வீரர் சவுத் ஷகீல் இரட்டை சதம் எடுத்தார்.
இலங்கையில் நடக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக பாகிஸ்தான் அணி இலங்கைக்கு சென்றுள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் கடந்த 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று 10 மணி அளவில் தொடங்கப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்ய முன்வந்தது. இதனை தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர்களாக நிஷான் மதுஷ்கா, திமுத் கருணாரத்ன களமிறங்கினர். தொடக்க ஆட்டக்காரர் நிஷான் மதுஷ்கா ஆரம்பமே அதிர்ச்சி அளித்தார். ஷாஹீன் அப்ரிடி வீசிய பந்தில் சர்பராஸ் அகமதுவிடம் கேட்ச் கொடுத்து 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்தவர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இலங்கை அணி சற்று தடுமாறியது. நிலைமையை புரிந்து கொண்டு களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் மற்றும் தனஞ்சய டி சில்வா நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். பொருப்புடன் விளையாடிய இருவரின் பாட்னர்ஷிப் 130 ரன்கள் வரை நீடித்தது. ஏஞ்சலோ மேத்யூஸ் 9 பவுண்டரிகலுடன் 64 ரன்களுக்கு அப்ரார் அகமது பந்தில் ஆட்டமிழந்தார்.
சதம் எடுத்த தனஞ்சய டி சில்வா
ஏஞ்சலோ மேத்யூஸ் விக்கெட்டுக்கு பிறகு தனஞ்சய டி சில்வா தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார், பின்னர் வந்தவர் பாகிஸ்தான் வீரர்கள் வீசிய பந்தை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். ஆனால் மறுபுறம் தனஞ்சய டி சில்வா பந்தை நாளாபுரமும் விளாசி சதம் எடுத்தார். இறுதியில் 312 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இலங்கை. அதிகப்பட்சமாக தனஞ்சய டி சில்வா 214 பந்துகலை எதிர்கொண்டு 12 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 122 ரன்கள் எடுத்தார்.
இரண்டாம் நாள் ஆட்டம்
இரண்டாம் நாளில் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை கொடுக்கவில்லை. அப்துல்லா ஷபீக் (19), இமாம்-உல்-ஹக் (1), ஷான் மசூத்(39) , பாபர் அசாம் (13), சர்பராஸ் அகமது (17) ஆகியோர் ஆட்டமிழந்தனர். அடுத்து களத்தில் இறங்கிய சௌத் ஷகீல் மற்றும் ஆகா சல்மான் பொருப்புடன் விளையாடி அணியை நல்ல நிலைமைக்கு எடுத்து சென்றனர். இரண்டாம் நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 221 ரன்கள் எடுத்திருந்தது பாகிஸ்தான்.
இரட்டை சதம் விளாசினார் சௌத் ஷகீல்
மூன்றாவது நாளான நேற்று சௌத் ஷகீல், ஆகா சல்மான் ஆட்டத்தை தொடங்கினர். இருவரின் நிதானமா ஆட்டத்தால் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் எடுத்த 312 ரன்களை கடந்தது. பொருப்புடன் விளையாடிய ஆகா சல்மான் 113 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டரிகள் 1 சிக்ஸருடன் 83 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சௌத் ஷகீல் இரட்டை சதம் எடுத்து பாகிஸ்தான் ரசிகர்களுக்கு விருந்தளித்தார்.அடுத்து வந்தவர்கள் ஷகீலுக்கு கைகொடுக்காமல் போனதால் 461 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது பாகிஸ்தான். சௌத் ஷகீல் 208 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார்.பின்னர் தனது இரண்டாவது இன்னிசை தொடங்கிய இலங்கை மூன்றாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்திருந்தது.
நான்காம் நாள் ஆட்டம்
நான்காம் நாள் ஆட்டத்தை இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் தொடங்கினர். ஆட்டம் தொடங்கிய சில நிமிடத்திலையே திமுத் கருணாரத்ன, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். நிஷான் மதுஷ்கா மட்டும் களத்தில் சிறப்பாக ஆடி வருகிறார்.