மேலும் அறிய

IND vs PAK: இரு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும் தயார்! விரைவில் இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு தொடர்!

இந்தியா - பாகிஸ்தான் இருதரப்பு தொடர் குறித்து இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஜகா அஹ்ரஃப் தெரிவித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் இருதரப்பு தொடர் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஜகா அஹ்ரஃப் ஒரு தகவலை தெரிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இருதரப்பு தொடர் குறித்து இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தயாராக இருப்பதாகவும், இந்த இருதரப்பு தொடருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியமும் அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார். 

கடைசியாக நடந்த இருதரப்பு தொடர்:

கடந்த 11 ஆண்டுகளாக இந்தியா - பாகிஸ்தான் இடையே இருதரப்பு தொடர் நடைபெறவில்லை. கடைசியாக கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் டி20 மற்றும் ஒருநாள் தொடருக்காக பாகிஸ்தான் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தது. அதன்பிற்கு, இருநாட்டு எல்லையில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக இருதரப்பு தொடர் எதுவும் நடைபெறவில்லை. 

2008 மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் இருந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்த பயங்கர தாக்குதலுக்கு பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பல துறைகளில் உறவு முறிந்தது. இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் பாதிக்கப்பட்டது மட்டுமின்றி, கலை, விளையாட்டு என அனைத்திலும் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் பாடகர்கள் மற்றும் நடிகர்கள் பாலிவுட்டில் தடை செய்யப்பட்ட நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் விளையாட தடை விதிக்கப்பட்டது.

சில காலம் கழித்து இருநாடுகளுக்கிடையிலான உறவை சீராக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வருகை தந்தது. ஆனால் 2013ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அரசியல் உறவுகள் மீண்டும் சீர்குலைந்து இரு நாடுகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியும் குறைந்துள்ளது. இப்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிகழ்வுகளின் போது மட்டுமே மோதுகின்றன.

பிசிபி தலைவர் என்ன சொன்னார்?

இதுகுறித்து ஜகா அஷ்ரப் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், "இந்தியா-பாகிஸ்தான் தொடரை பொறுத்த வரையில், இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் பரஸ்பரம் விளையாட தயாராக உள்ளன. அரசிடம் அனுமதி பெறுவதில் தான் தாமதம் ஏற்படுகிறது. பிசிசிஐ தரப்பில் இருந்து இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.. இருப்பினும், இந்திய விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்கூர் சில மாதங்களுக்கு முன்பு இந்தியா-பாகிஸ்தான் இருதரப்பு தொடர் தொடர்பான தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். எல்லையில் தாக்குதல் மற்றும் ஊடுருவல் முடியும் வரை பாகிஸ்தானுடன் இருதரப்பு தொடர்களில் விளையாட மாட்டோம் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக அவர் கூறியிருந்தார்.

ஜம்மு & காஷ்மீரின் அனந்த்நாக்கில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று உயர் இந்திய பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்திய விளையாட்டு அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்த அறிக்கையை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அணி கடைசியாக பாகிஸ்தானுடன் 2023 உலகக் கோப்பையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஒருநாள் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இரு அணிகளும் அடுத்ததாக வருகின்ற ஜூன் 9ம் தேதி நியூயார்க் நகரத்தில் 2024 டி20 உலகக் கோப்பையில் மோத இருக்கின்றன. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி Aadhav Arjuna ED Raid |ஆதவ் வீட்டில் ED ரெய்டு! சிக்குகிறாரா லாட்டரி மார்டின்? பரபரப்பில் விசிகPriyanka Gandhi Wayanad|ராகுலை தாண்டுவாரா பிரியங்கா?ட்விஸ்ட் கொடுத்த வயநாடு!கதறும் பாஜக, கம்யூனிஸ்ட்DOGE Elon musk | ‘’வாங்க எலான் மஸ்க்..’’ ட்ரம்ப் கொடுத்த ASSIGNMENT! கலக்கத்தில் அமெரிக்கர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
Embed widget