Watch Video: ’இதெல்லாம் நடிப்பா கோபால்’... களத்தில் வலியில் துடித்தது போல் நடித்த ரிஸ்வான்.. கடைசியில் வெளிவந்த உண்மை!
அப்துல்லா ஹபீக் மற்றும் ரிஸ்வான் இருவரும் சதம் அடித்து, உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன் சேஸ் செய்த அயர்லாந்தின் 12 ஆண்டுகால சாதனையை பாகிஸ்தான் முறியடித்தது.
நடந்து கொண்டிருக்கும் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் இலங்கை வீழ்த்தி பாகிஸ்தான் 2வது வெற்றியை பதிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 344 ரன்கள் குவித்தது.
345 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்கத்தில் 37 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து பாகிஸ்தான் அணி தடுமாறியது. அப்போது, ரிஸ்வான் தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபீக்குடன் இணைந்து 176 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்து பாகிஸ்தான் அணியை வெற்றிக்கு பாதைக்கு அழைத்து சென்றனர். அப்துல்லா ஹபீக் மற்றும் ரிஸ்வான் இருவரும் சதம் அடித்து, உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன் சேஸ் செய்த அயர்லாந்தின் 12 ஆண்டுகால சாதனையை பாகிஸ்தான் முறியடித்தது.
“Get Rizwan in the movies"
— Samin Haque 🇧🇩 (@imSamin) October 10, 2023
- Simon Doull (on air) #PAKvsSL | #Rizwan | #CWC23 | pic.twitter.com/SLFTzq7xCA
131 ரன்கள் அடித்து கடைசிவரை அவுட்டாகாமல் சிறப்பாக விளையாடிய ரிஸ்வானுக்கு, அவ்வபோது காலில் தசைபிடிப்பு ஏற்பட்டது. சில சமயங்களில் வலி தாங்காமல் அவர் மைதானத்திலேயே விழுந்தார். ரிஸ்வான் 80 ரன்கள் எடுத்திருந்தபோது முதலில் அவரது வலது காலில் லேசாக வலி ஏற்பட்டது. அதை தொடர்ந்து, அவருக்கு வலி நிவாரணி மற்றும் மருந்துகளையும், பிசியோவிடமிருந்து சிகிச்சையும் எடுத்துக் கொண்டார். 37 வது ஓவரில் தனஞ்சய டி சில்வாவின் பந்து வீச்சில் ரிஸ்வான் சிக்ஸர் அடித்தபோது அவருக்கு மீண்டும் தசைப்பிடிப்பு ஏற்பட்டு, தரையில் விழுந்தார்.
He was hit, he was down, he was in pain but nothing stopped..!!!!
— Johns. (@CricCrazyJohns) October 10, 2023
The fighter, The crisis man, He is Mohammed Rizwan. pic.twitter.com/nwg8oyAC8b
இதை பார்த்து கிண்டல் செய்த வர்ணனையாளர்களில் ஒருவரான சைமன் டவுல், “ யாராவது அவரை திரைப்படங்களில் நடிக்க அழைத்து செல்லுங்கள்” என்று தெரிவித்தார். ரிஸ்வான் வலியில் இருப்பதைப் பார்த்து வர்ணனையாளர்கள் ஏன் கிண்டல் செய்கிறார்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர்.
"Sometimes it cramps, sometimes it's acting"
— Haseeb A. (@_HASEEB20) October 10, 2023
Rizzy scheme out kartay huwy 😂 #PAKvSL #rizwan pic.twitter.com/8bntCXRqZN
அடுத்த ஓவரில் இன் ஸ்விங் பந்து ஒன்று அவரது வலது காலில் தாக்கியது. அப்போது அவர் மீண்டும் வலியில் துடித்தார். சதத்தை அடிப்பதற்காக ரிஸ்வான் ஓடியபோது அவர் நொண்டிக் கொண்டே சென்றார். தனது பிறகு தானாகவே இயல்பு நிலைக்கு வந்து பாகிஸ்தானை அபார வெற்றிக்கு அழைத்துச் சென்றார். போட்டிக்குப் பிறகு அவரது தசைப்பிடிப்புகளைப் பற்றி கேட்கப்பட்டபோது, ரிஸ்வானே அவை அனைத்தும் உண்மையானவை அல்ல என்று ஒப்புக்கொண்டார். அப்போது அவர். “ சில நேரங்களில் உண்மையிலேயே தசைபிடிப்பு ஏற்பட்டது. சில நேரங்களில் நடித்தேன்.” என ஓபனாக பேசினார்.
இதை கேட்ட கிரிக்கெட் ரசிகர்கள் அடப்பாவி! இதெல்லாம் வெறும் நடிப்பா என்று அதிர்ச்சி அடைந்தனர்.