Babar Azam: டி20யில் அதிக ரன்கள்! ரோஹித் சர்மாவை முந்தி சென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்!
சர்வதேச அளவில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் டி20 போட்டியில் இதுவரை 118 போட்டிகளில் 3 ஆயிரத்து 987 ரன்கள் எடுத்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் பாகிஸ்தான் - இங்கிலாந்து மோதும் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2வது போட்டியானது நேற்று எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. இதில்தான் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இந்த மைல்கல்லை எட்டி, சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்களை குவித்த விராட் கோலி உலக சாதனையை நெருங்கியுள்ளார்.
விராட் கோலி:
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சாதனை படைத்துள்ளார். விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4037 ரன்கள் குவித்துள்ளார். மேலும், டி20 போட்டிகளில் 4000 ரன்களை கடந்த ஒரே பேட்ஸ்மேன் ஆவார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் விராட் கோலி 4037 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் ரோஹித் சர்மா 3974 ரன்களுடன் 2வது இடத்தில் இருந்தார். தற்போது பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 3987 ரன்கள் குவித்து ரோஹித் சர்மாவை மூன்றாவது இடத்திற்கு தள்ளியுள்ளார். தற்போது விராட் கோலிக்கும் பாபர் அசாமுக்கும் இடையே 50 ரன்கள் மட்டுமே இடைவெளி உள்ளது.
இங்கிலாந்து எதிராக 32 ரன்கள்:
எட்ஜ்பாஸ்டனில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்து - பாகிஸ்தான் 2வது டி20 போட்டியில் பாபர் அசாம் 26 பந்துகளில் 4 பவுண்டரிகள் உள்பட 123.08 ஸ்ட்ரைக் ரேட்டிடன் 32 ரன்கள் மட்டுமே குவித்தார். நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 1-0 என இங்கிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.
2வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 160 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, இந்த போட்டியில் பாகிஸ்தான் இங்கிலாந்துக்கு எதிரான 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இரு அணிகள் மோதிய இந்த தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
டி20யில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியல்:
Babar Azam surpasses Rohit Sharma and is now only behind Virat Kohli for the most runs in T20Is 🇵🇰🏏#BabarAzam #Pakistan #T20Is #CricketTwitter pic.twitter.com/7QGZFygx3X
— Sportskeeda (@Sportskeeda) May 25, 2024
பேட்ஸ்மேன்கள் | நாடு | போட்டிகள் | ரன்கள் |
விராட் கோலி | இந்தியா | 117 | 4037 |
பாபர் அசாம் | பாகிஸ்தான் | 118 | 3987 |
ரோஹித் சர்மா | இந்தியா | 151 | 3974 |
பால் ஸ்டெர்லிங் | அயர்லாந்து | 142 | 3589 |
மார்ட்டின் கப்டில் | நியூசிலாந்து | 122 | 3531 |
முகமது ரிஸ்வான் | பாகிஸ்தான் | 97 | 3180 |
ஆரோன் பின்ச் | ஆஸ்திரேலியா | 103 | 3099 |
ஜாஸ் பட்லர் | இங்கிலாந்து | 115 | 3011 |
வில்லியம்சன் | நியூசிலாந்து | 89 | 2547 |
முகமது ஹபீஸ் | பாகிஸ்தான் | 119 | 2514 |
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் டி20 போட்டியில் இதுவரை 118 போட்டிகளில் 3987 ரன்கள் எடுத்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் 4000 ரன்களை கடக்க பாபர் இன்னும் 13 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். வரவிருக்கும் பாகிஸ்தான் vs இங்கிலாந்து 3வது டி20 போட்டியில் அவர் இதை சாதித்தாலும், குறைந்த இன்னிங்ஸ்களில் மைல்கல்லை எட்டிய விராட் கோலியின் சாதனையை பாபரால் முறியடிக்க முடியாது.
விராட் கோலி 107 இன்னிங்ஸ்களில் 4000 டி20 ரன்களை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 151 போட்டிகளில் 139.97 ஸ்டிரைக் ரேட்டில் 3974 ரன்கள் குவித்துள்ளார்.