![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Ruturaj Gaikwad: ஒரே ஓவரில் பறந்த 7 சிக்ஸர்கள்.. பந்துடன் சாதனையை தெறிக்கவிட்ட ருத்ராஜ் கெய்க்வாட்!
Ruturaj Gaikwad: விஜய் ஹசாரே போட்டித் தொடரின் கால் இறுதிப் போட்டியில் மஹாராஸ்ட்ரா அணிக்காக ருத்ராஜ் கெய்க்வாட் ஒரே ஓவரில் 7 சிக்ஸர் பறக்கவிட்டு ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையையும் தன் பக்கம் இழுத்துள்ளார்
![Ruturaj Gaikwad: ஒரே ஓவரில் பறந்த 7 சிக்ஸர்கள்.. பந்துடன் சாதனையை தெறிக்கவிட்ட ருத்ராஜ் கெய்க்வாட்! Outrageous hitting from Ruturaj Gaikwad Seven sixes in an over Ruturaj Gaikwad: ஒரே ஓவரில் பறந்த 7 சிக்ஸர்கள்.. பந்துடன் சாதனையை தெறிக்கவிட்ட ருத்ராஜ் கெய்க்வாட்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/28/1a8e88aa50cb036d7ed1f897be4368091669621166946224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Ruturaj Gaikwad: விஜய் ஹசாரே போட்டித் தொடரின் கால் இறுதிப் போட்டியில் மஹாராஸ்ட்ரா அணிக்காக ருத்ராஜ் கெய்க்வாட் ஒரே ஓவரில் 7 சிக்ஸர் பறக்கவிட்டு ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையையும் தன் பக்கம் இழுத்துள்ளார்.
View this post on Instagram
மஹாராஸ்ட்ரா உத்திர பிரதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது கால் இறுதிப் போட்டியின் 49வது ஓவரில் ஒரு நோ-பால் உட்பட மொத்தம் 7 பந்துகளை எதிர்கொண்டு 7 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார். இந்த ஓவரை உத்திர பிரதேச அணியின் சிவா சிங் வீசினார். தற்போது வரை ருத்ராஜ் கெய்க்வாட் 159 பந்துகளில் 10 ஃபோர், 16 சிக்ஸர் உட்பட மொத்தம் 220 ரன்கள் விளாசி களத்தில் நங்கூரம் போல் இருந்தார்.
6 6 6 6 6nb 6 6 in an over from Ruturaj Gaikwad 🔥
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 28, 2022
(via @BCCIdomestic) pic.twitter.com/tlFZjj7hnA
50 ஓவர்கள் முடிவில் அணியின் ஒட்டுமொத்த ஸ்கோரே 330ஆக இருக்க ருத்ராஜ் கெய்க்வாட் மட்டும் 220 ரன்கள் விளாசி இரட்டைச் சதம் அடித்துள்ளார். இவரது ஸ்டைரைக் ரேட் 138.36 ஆக உள்ளது. அதேபோல், இந்த போட்டியில் மொத்தம் 9 ஓவர்கள் வீசியுள்ள உத்திர பிரதேச அணியின் சிவா சிங் மொத்தம் 88 ரன்கள் விட்டுகொடுத்துள்ளார். அதில் ருத்ராஜ் கெய்க்வாட் ஒரே ஓவரில் 7 சிக்ஸர் பறக்கவிட்டதில் மட்டும் 43 ரன்கள் ஆகும். இவரது எக்கானமி 9.80 ஆக உள்ளது.
தற்போது உத்திர பிரதேச அணி 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)