AUS vs NZ Score LIVE: கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து; பயம் காட்டிய நியூசிலாந்து; போராடி வென்ற ஆஸ்திரேலியா
AUS vs NZ Score LIVE: ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை போட்டிகளின் லைவ் அப்டெட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏபிபி நாடு பக்கத்தில் இணைந்திருங்கள்.

Background
2023 உலகக் கோப்பையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தர்மசாலாவிலும், 2வது போட்டி வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் நடக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் காலை 10.30 மணிக்கு தொடங்குகியது. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையேயான போட்டி இன்னும் சிறிது நேரத்தில் தொடங்கவுள்ளது. இந்த போட்டி தர்மஷாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடக்கிறது. இங்குள்ள ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எப்போதும் நல்ல உதவி கிடைத்து வருகிறது.
இந்த உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கிவி அணி இதுவரை ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றுள்ளது. எட்டு புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். அதேசமயம் ஆஸ்திரேலியா ஐந்து ஆட்டங்களில் மூன்றில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலிய அணி:
டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), கிளென் மேக்ஸ்வெல், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்
நியூசிலாந்து அணி:
டெவன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், டிரெண்ட் போல்ட்
AUS vs NZ Score LIVE: ஆஸ்திரேலியா வெற்றி..!
50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 383 ரன்கள் சேர்த்தது. இதனால் ஆஸ்திரேலியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
AUS vs NZ Score LIVE: 48 ஓவர்கள் முடிந்தது..!
48 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டினை இழந்து 357 ரன்கள் சேர்த்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 12 பந்தில் 32 ரன்கள் தேவை.



















