மேலும் அறிய

Bang Vs Afg LIVE Score: உலகக் கோப்பை கிரிக்கெட்... வங்கதேச அணி வெற்றி!

ODI World Cup 2023 bang vs afg LIVE Score: உலகக் கோப்பையில் இன்று நடைபெறும் வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.

LIVE

Key Events
Bang Vs Afg LIVE Score: உலகக் கோப்பை கிரிக்கெட்... வங்கதேச அணி வெற்றி!

Background

ODI World Cup 2023 bang vs afg LIVE Score: உலகக் கோப்பையில் தர்மாசாலாவில் இன்று நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில், வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் மோதல்:

சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் ஒருநாள் உலகக் கோப்பை கடந்த 5ம் தேதி உற்சாகமாக தொடங்கியது.  நவம்பர் 19ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெற்றி பெற்றன. இந்நிலையில் இன்று உலகக் கோப்பையில் இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்படி, காலை 10.30 மணியளவில் தர்மசாலாவில் நடைபெறும் முதல் போட்டியில், ஆசியாவை சேர்ந்த வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன. அண்மையில் நடந்த ஆசியக் கோப்பை லீக் போட்டியில் பெற்ற தோல்விக்கு, வங்கதேசத்தை பழிதீர்க்க ஆப்கானிஸ்தான் அணி முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.   போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஹாட்-ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.

பலம் & பலவீனங்கள்:

ஆப்கானிஸ்தான் அணி வழக்கம்போல் தனது வெற்றிக்கு சுழற்பந்து வீச்சையே பெரும்பாலும் நம்பியுள்ளது. அதேநேரம், அணியின் முன்கள வீரர்களின் அதிரடியான ஆட்டமும், நல்ல ஃபார்மும் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. தொடக்கத்திலேயே விக்கெட்டுகள் சரிந்தால், அணியை மீட்பதற்கான சரியான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இல்லாத ஆப்கானிஸ்தான் அணியின் பின்னடைவாக கருதப்படுகிறது. வங்கதேச அணியை பொருத்தவரையில் தொடக்க வீரர் தமிம் இக்பால் விளையாடாதது முதல் பின்னடைவாகும். இருப்பினும் கேப்டன் ஷகிப் அல் ஹசன், துணை கேப்டன் லிட்டன் தாஸ், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான தன்சித் ஹசன், ஹிரிடோய் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். முஷ்ஃபிகுர் ரஹீம் மற்றும் முகமதுல்லா போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களும் இருப்பது கூடுதல் வலுவாக உள்ளது. வேகப்பந்துவீச்சு மற்றும் சுழற்பந்துவிச்சு என இரண்டு யூனிட்டும் சரியான கலவையில் வங்கதேசத்திற்கு அமைந்துள்ளது.

நேருக்கு நேர்:

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 15 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், 9 முறை வங்கதேச அணியும், 6 முறை ஆப்கானிஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளது.

மைதானம் எப்படி?

போட்டி நடைபெறும் தர்மசாலா மைதானம் பொதுவாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கிறது. மீடியம் பேசர்கள் விக்கெட் வேட்டை நடத்த ஏதுவாக இருக்கும். இதுவரை அங்கு நான்கு சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. வானிலையை பொருத்தவரையில் தர்மசாலாவில் பகலில் அதிகபட்ச வெப்பநிலை 30° C ஆக இருக்கும், ஆனால் மாலையில் 22° C ஆகக் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், போட்டி பாதிக்கப்பட வாய்ப்பில்லை.

உத்தேச அணிகள்:

வங்கதேசம்:

மெஹிதி ஹசன் மிராஸ், லிட்டன் தாஸ், நஸ்முல் ஹொசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம், தவ்ஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா, மஹேதி ஹசன்/நாசும் அகமது, தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான்

ஆப்கானிஸ்தான்:

ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), முகமது நபி, நஜிபுல்லா சத்ரான், அஸ்மத்துல்லா உமர்சாய், ரஷீத் கான், முஜீப் உர் ரஹ்மான், நவீன்-உல்-ஹக், ஃபசல்ஹாக் ஃபரூக்கி

வெற்றி வாய்ப்பு: வங்கதேச அணி வெற்றி பெறவே கூடுதல் வாய்ப்பு

16:38 PM (IST)  •  07 Oct 2023

வங்கதேச அணி அபரா வெற்றி பெற்றது.

6 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி, ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அபரா வெற்றி பெற்றது.

16:13 PM (IST)  •  07 Oct 2023

33 ஓவர்கள் முடிவில் 141 ரன்களுடன் வங்கதேச அணி விளையாடி வருகிறது.

வெற்றி முனைப்புடன் விளையாடி வரும் வங்கதேச அணி தற்போது 33 ஓவர்கள் முடிவில் 141 ரன்கள் எடுத்துள்ளது.

16:13 PM (IST)  •  07 Oct 2023

33 ஓவர்கள் முடிவில் 141 ரன்களுடன் வங்கதேச அணி விளையாடி வருகிறது.

வெற்றி முனைப்புடன் விளையாடி வரும் வங்கதேச அணி தற்போது 33 ஓவர்கள் முடிவில் 141 ரன்கள் எடுத்துள்ளது.

15:53 PM (IST)  •  07 Oct 2023

ஆட்டமிழந்தார் மெஹிதி ஹசன் மிராஸ்!

அதிரடியாக விளையாடி அரைசதம் (57) அடித்த மெஹிதி ஹசன் மிராஸ் ஆட்டமிழந்தார்.

15:40 PM (IST)  •  07 Oct 2023

வெற்றி முனைப்பில் வங்கதேசம் அணி!

26 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 109 ரன்கள் எடுத்து வெற்றி முனைப்புடன் விளையாடிவருகிறது. மெஹிதி ஹசன் மிராஸ் 52 ரன்களும், நஜ்முல் ஹொசைன் சாண்டோ 32 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault | ADMK BJP Alliance | TARGET அதிமுக!பாஜக கொடுத்த ASSIGNMENT..ஆக்‌ஷனில் இறங்கிய TTV | EPS | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
Embed widget