Watch Video: தோல்விக்கு மிக மிக அருகில் நியூசிலாந்து.. இறுதியில் மீண்ட அதிசயம்.. இணையத்தில் ட்ரெண்டாகும் வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான இராண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்விக்கு அருகில் இருந்து மீண்டு நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
வெலிங்டனில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி நியூசிலாந்து கிரிக்கெட்டில் புதிய வரலாற்றை இன்று (பிப்ரவரி 28) படைத்தது. ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சிறப்பு மிக்க அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது. ஏனெனில் நியூசிலாந்து இந்த டெஸ்டில் ஃபாலோ-ஆன் செய்ய வேண்டிய சூழலுக்கு சென்று டெஸ்ட் போட்டியை வென்ற மூன்றாவது நாடு என்ற சிறப்பினைப் பெற்றுள்ளது. நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) வைத்திருப்பவர்களான நியூசிலாந்து அணி, இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நடந்த மவுன்ட் மவுங்கானுயில் நடந்த முதல் போட்டியில் தோல்வியடைந்ததால், இரண்டாவது போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
இரண்டாவது டெஸ்டில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், ரெட்-பால் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு நாடு ஃபாலோ-ஆன் செய்து டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருப்பது இது நான்காவது முறையாகும். 258 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜோ ரூட் (95), பென் ஃபோக்ஸ் (35) ஆகியோர் தங்கள் துணிச்சலான ஆட்டங்களுக்குப் பிறகும் தோல்வியைத் தழுவினர். ஜூன் 2022 முதல் இங்கிலாந்து அணியின் கேப்டனாக உள்ள பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைவது இரண்டாவது முறையாகும்.
வெற்றிக்கு 210 ரன்கள் தேவை என்ற நிலையில், இங்கிலாந்து அணி, இன்றைய ஆட்டத்தில் மோசமான தொடக்கம் ஒரு முக்கிய காரணமாகும். குறிப்பாக, ஓலி ராபின்சன் (2), பென் டக்கெட் (33), ஒல்லி போப் (14), ஹாரி புரூக் (0) ஆகியோரை ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்தது நியூசிலாந்து அணிக்கு சாதகமாக அமைந்தது. இருப்பினும், ஆறாவது விக்கெட்டுக்கு 121 ரன்களை எடுத்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அவருக்கு உறுதுணையாக இருந்தபோது ரூட் இங்கிலாந்து அணியை நிலைநிறுத்தினார்.
ஆனால் ஸ்டோக்ஸ் மற்றும் ரூட் விரைவில் வெளியேற அதற்குள் நியூசிலாந்து அணி மீண்டும் ஆட்டத்தினை தங்கள் பக்கம் கொண்டு வந்தனர். 215/8 என்ற நிலையில் இருந்தபோது, நியூசிலாந்து ஏறுமுகத்தில் காணப்பட்டது, வெற்றிக்கு ஏழு ரன்கள் தேவை என இருந்த போது ஃபோக்ஸ் ஆட்டமிழந்ததால், போட்டியில் உச்சகட்ட பரபரப்பு தொற்றிக் கொண்டது.
Historic moment in Test cricket - Take a bow, Kiwis. pic.twitter.com/i5SuzGoEbY
— Johns. (@CricCrazyJohns) February 28, 2023
அதன் பின்னர், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு பவுண்டரி அடித்ததால், ஒரு விக்கெட் கையில் இருந்த நிலையில் இங்கிலாந்தை வெற்றிக்கு அருகில் அழைத்துச் செல்வார் என நம்பிக்கை இங்கிலாந்துக்கு ஏற்பட்டது. இந்நிலையில் ஆட்டத்தில் தொடர்ந்து அதிக விறுவிறுப்பும் பதற்றமும் ஏற்பட்டது, வெற்றிக்கு இரண்டு ரன்கள் தேவை என இருந்த போது ஆண்டர்சன் ஆட்டமிழக்க போட்டியை ஒரு ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வென்றது. தற்போது இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஃபாலோ-ஆன் பிறகு வெற்றி பெற்ற அணிகள்
1894 - இங்கிலாந்து 10 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது
1981 - இங்கிலாந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது
2001 - இந்தியா 171 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது
2023 - நியூசிலாந்து 1 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது