Novak Djokovic: விராட் கோலியுடன் மேசேஜ்ல பேசுவேன்... டென்னிஸ் ஜாம்பவான் நோவாக் ஜோகோவிச்!
சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலியை விரைவில் சந்திக்க இருப்பதாக நோவாக் ஜோகோவிச் கூறியுள்ளார்.
ரன் மிஷின் விராட் கோலி:
இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை போல் சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்தியாவில் இருந்து மிகவும் பிரபலமான வீரர் விராட் கோலி. இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் உலகில் அறிமுகமானார். அந்தவகையில், இதுவரை 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 8848 ரன்களும், 292 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 13848 ரன்களும் குவித்துள்ள இவர் சச்சின் டெண்டுல்கரின் பல்வேறு சாதனைகளையும் முறியடித்துள்ளார். அண்மையில் சர்வதேச ஒரு நாள் போட்டியில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
அதேபோல், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக ரசிகர்களை கொண்ட கால்பந்து வீரர்களான ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களை கொண்ட வீரராகவும் கோலி இருக்கிறார்.
இந்நிலையில் தான் கடந்த சில வருடங்களாக விராட் கோலியுடன் மொபைல் போனில் தொடர்பில் இருப்பதாக டென்னிஸ் ஜாம்பவான் நோவாக் ஜோக்கோவிச் கூறியுள்ளார்.
விரைவில் சந்திப்பேன்:
இது தொடர்பாக அவர் பேசுகையில், “இந்தியாவிற்கு செல்ல வேண்டும் என்று பல ஆண்டுகளாக நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். இது வரை நான் இந்தியாவிற்கு ஒரு முறை மட்டும் தான் சென்றிருக்கிறேன். அது எப்போது என்றார் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லியில் நடைபெற்ற கண்காட்சி போட்டியில் விளையாடுவதற்காக சென்றதது தான். மகத்தான வரலாறும், கலாச்சாரமும், மத நம்பிக்கைகளையும் கொண்ட அந்த நாட்டிற்கு விரைவில் செல்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. அங்கு உள்ள விளையாட்டு வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி போன்றவர்களுடன் நான் தொடர்பில் இருக்கிறேன். விரைவில் அவர்களை சந்திப்பேன்.
குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் விராட் கோலியுடன் நான் மொபைல் போன் மேசேஜ் தொடர்பில் இருக்கிறேன். ஆனால் நான் இன்னும் அவரை நேரில் பார்க்கவில்லை. அவர் என்னை பற்றி பேசியது எனக்கு கெளரவமாக இருக்கிறது. கோலியின் விளையாட்டை நான் ரசிக்கிறேன்” என்று கூறியுள்ளார் நோவாக் ஜோக்கோவிச். முன்னதாக, ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில், நடப்பு ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் போட்டி நேற்று தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Viral Video: ஜோகோவிச்சுடன் டென்னிஸ் ஆடிய ஸ்டீவ் ஸ்மித்! ரசிகர்களுக்கு டபுள் குஷி!
மேலும் படிக்க: IND vs AFG 1st T20 LIVE: முதல் போட்டியை வென்றது இந்தியா; அரைசதம் விளாசிய ஷிபம் துபே