மேலும் அறிய

”யாரும் மதிக்கல, சப்போர்டும் பண்ணல” - கிரிக்கெட்டில் இருந்து விலகியதற்கான காரணத்தை சொன்ன யுவராஜ்

Yuvraj Singh Retirenment: இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான யுவராஜ் சிங், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது ஏன்? என்ற காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Yuvraj Singh Retirenment: மதிக்காததை போன்றும், மரியாதை இல்லாததை போன்றும் உணர்ந்ததாலே கிரிக்கெட்டில் இருந்து விலகியதாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது ஏன்? -யுவராஜ்

இந்திய அணி 2007ம் ஆண்டு தனது முதல் டி20 உலகக் கோப்பையை வென்றதற்கும், 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதற்கும், நட்சத்திர ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் மிக முக்கிய பங்கு வகித்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்தவர் யாரும் எதிர்பாராத விதமாக, கடந்த 2019ம் ஆண்டு ஜுன் மாதம், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ஒருநாள் உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பெறாததை தொடர்ந்து,  சர்வதேச போட்டிகள் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக யுவராஜ் சிங் அறிவித்தார். இந்நிலையில், தனது முடிவுக்கான காரணத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

என்னை யாரும் மதிக்கவில்லை - யுவராஜ் சிங்

இந்திய அணியின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனையான சானிய மிர்சா உடனான பாட்காஸ்டில், 44 வயதான யுவராஜ் சிங் பங்கேற்றார். அப்போது, தனக்கு போதிய மரியாதையும், ஆதரவும் கிடைக்காதது, தொடர்ந்து கிரிக்கெட் விளையாடுவதில் மகிழ்ச்சியை வழங்கவில்லை என தெரிவித்துள்ளார். அதன்படி, “"எனது விளையாட்டை நான் ரசிக்கவில்லை. கிரிக்கெட் விளையாடும்போது எனக்கு அது பிடிக்கவில்லை, ஏன் விளையாடுகிறேன் என்று எனக்குத் தோன்றியது. எனக்கு ஆதரவு இல்லை, மரியாதை இல்லை. பின்பு எதற்காக நான் ஏன் இதைச் செய்ய வேண்டும் என்று உணர்ந்தேன். எனக்கு பிடிக்காத ஒன்றை நான் ஏன் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்? நான் ஏன் விளையாட வேண்டும்? எதை நிரூபிக்க வேண்டும்? இதை விட அதிகமாக மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ என்னால் செய்ய முடியாது, அது என்னை காயப்படுத்தியது. இதன் விளைவாக நான் விளையாடுவதை நிறுத்திய பிறகே, நான் மீண்டும் நானாகவே இருந்தேன்" என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். 

”யாரும் மதிக்கல, சப்போர்டும் பண்ணல” - கிரிக்கெட்டில் இருந்து விலகியதற்கான காரணத்தை சொன்ன யுவராஜ்

டி20 போட்டிகளின் அடையாளம்

இந்திய கிரிக்கெட் அணி இன்று கொண்டுள்ள வலுவான மற்றும் அதிரடியான மனநிலைக்கு வித்திட்டவர்களில் யுவராஜ் சிங் மிக முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. டி20 போட்டிகளை எப்படி கையாள வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்ததோடு, 12 பந்துகளில் அரைசதம் விளாசிய அவரது சாதனை இன்றளவும் முறியடிக்கப்படவில்லை. உடல்நிலை மோசமாகி ஆடுகளத்திலேயே வாந்தி எடுத்தபோதும் நிலைத்து நின்று ஆடி, ஒருநாள் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற, கோடிக்கணக்கான இந்தியர்களின் கனவை நிறைவேற்றி கொடுத்தவர். புற்றுநோய் மட்டும் யுவராஜ் சிங்கின் வாழ்க்கையை பாதிக்காமல் இருந்து இருந்தால், இந்திய அணிக்காக அவர் மேலும் பல சாதனைகளை படைத்து இருப்பார்  என்பதே இன்றளவும் ரசிகர்களின் நம்பிக்கையாகும். அத்தகைய வீரர், இப்படி ஒரு மோசமான அனுபவத்துடன் கிரிக்கெட்டில் இருந்து விலகியதாக கூறி இருப்பது, ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
Embed widget