SEO vs TSK: அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சியாட்டில் ஓர்காஸ்.. டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் வீழ்த்தி அபார வெற்றி!
MLC 2023: அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் வீழ்த்தி அபரமாக வெற்றி பெற்ற சியாட்டில் ஓர்காஸ்....
அமெரிக்காவில் உள்ள சர்ச் ஸ்ட்ரீட் பார்க் ஸ்டேடியத்தில் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் 10 வது போட்டி சியாட்டில் ஆர்காஸ் அணியும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதின. இதில் டாஸ் வென்ற சியாட்டில் ஆர்காஸ் அணியின் கேப்டன் முதலில் பந்துவீசுவதாக கூறினார். இதனை தொடர்ந்து டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டெவோன் கான்வே, டூ பிளெசிஸ் ஆகியோர் களமிறங்கினர். முதல் இன்னிங்கிஸில் வீசிய முதல் பந்திலேயே டெவோன் கான்வே தனது விக்கெட்டை பறிகொடுத்தார். டூ பிளெசிஸ் மற்றும் கோடி செட்டியும் சிறிது நேரம் தாக்குப்பிடித்தனர். பின்னர் இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க அணியின் தடுமாறியது.
நிதானமாக ஆடிய பிராவோ
பின்னர் வந்த டேவிட் மில்லர் (8), மிலிந்த் குமார் (1), மிட்செல் சான்ட்னர் (2) என்று ஒற்றை ரன்களில் விக்கெட்டை சியாட்டில் ஆர்காஸ் அணியிடம் தாரை வார்த்தது. நிலைமையை புரிந்து கொண்டு களமிறங்கிய பிராவோ மற்றும் டேனியல் சாம்ஸ் நிதானமாகவே ஆட தொடங்கின. இருப்பினும் சியாட்டில் ஆர்காஸ் பந்து வீச்சாளர்கள் சிறப்பான பந்துவீச்சால் ரன்கள் மளமளவென உயரவில்லை. இருப்பினும் பிராவோ அவ்வபோது பவுண்டரிகள் அடித்து அணிக்கு நம்பிக்கை அளித்தார். 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 127 ரன்கள் எடுத்தது டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ். அதிகப்பட்சமாக பிராவோ 39 பந்துகளுக்கு 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 39 ரன்களை எடுத்தார்.
ஆரம்பமே அதிரடி ஆட்டம்
128 ரன்களை இலக்காக கொண்டு சியாட்டில் ஆர்காஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டி காக் மற்றும் நௌமான் அன்வர் களமிறங்கினர். ஆரம்பம் முதலே டி காக் அதிரடியாக ஆட தொடங்கினர். இருவரின் பார்ட்னர்ஷிப் 67 ரன்களை வரை தொடர்ந்தது. நௌமான் அன்வர் 32 பந்துகள் பிடித்து 1 பவுண்டரிகளுடன் 19 ரன்னில் மிட்செல் சான்ட்னர் பந்தில் போல்ட் ஆனார். பின்னர் வந்த ஹென்ரிச் கிளாசன் டி காக் உடன் கைகோர்த்து சூப்பர் கிங்ஸ் அணியின் பந்தை நாளாப்புறம் சிதரடித்தனர். இருவரின் ஆட்டத்தால் சியாட்டில் ஆர்காஸ் அணி வெற்றி நோக்கி பயனித்தது.
அபார வெற்றி
டி காக் 36 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகள் 3 சிக்ஸருடன் 53 ரன்களுக்கு அவுட் ஆனார். பின்னர் தசுன் ஷானகாவுடன் ஜோடி சேர்ந்து அணியை 16 வது ஓவரில் வெற்றி பெற செய்தனர். அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசன் 21 பந்துகளுக்கு 4 பவுண்டரி 3 சிக்ஸர் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஹாட்ரிக் வெற்றியுடன் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை புள்ளிப்பட்டியில் கீழே தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறியது சியாட்டில் ஆர்காஸ்