Virat Kohli: இந்தியாவுக்கு அவசர, அவசரமாக திரும்பிய விராட் கோலி! கூடவே வந்த அதிரடி வீரர் - காரணம் தெரியுமா?
Virat Kohli: டெஸ்ட் தொடருக்காக தென்னாப்பிரிக்க சென்ற விராட் கோலி அவசரம், அவசரமாக இந்தியா திரும்பியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றது. இதில் ஏற்கனவே
இந்தியா திரும்பிய கோலி:
ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்நிலையில் வரும் 26ஆம் தேதி இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நடக்கவுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட சீனியர் வீரர்களுட சில டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களும் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றனர்.
டெஸ்ட் போட்டிக்காக மொத்தமாக தயாராகிவரும் இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் மற்றும் ரன் மெஷின் எனப்படும் விராட் கோலி திடீரென இந்தியாவுக்கு திரும்பியுள்ளார். விராட் கோலி தென்னாப்பிரிக்காவில் இருந்து திடீரென இந்தியாவுக்கு திரும்பியுள்ளது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரும்ப வந்த ருத்ராஜ்:
விராட் கோலி இந்தியா திரும்பியதற்கான காரணம் அவரது குடும்பம் சம்பந்தமான காரணங்கள் என கூறப்படுகின்றது. இது மட்டும் இல்லாமல் இந்த டெஸ்ட் தொடரில் பி.சி.சி.ஐ.ஆல் அறிவிக்கப்பட்ட வீரர்களில் ஒருவரான இஷான் கிஷனும் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பியுள்ளார். இஷான் கிஷனுக்குப் பதிலாக இந்திய அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எஸ். பரத்தினை அணியில் சேர்த்துள்ளது. அதேபோல் தனது கை விரல்களில் ஏற்பட்ட காயத்தினால் அவதிப்பட்டு வரும் ருத்ராஜ் கெய்க்வாட்டும் இந்திய அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்குப் பின்னர் விராட் கோலியை ரசிகர்கள் எங்குமே பார்க்க முடியவில்லை என்ற ஏக்கத்தில் இருந்தனர். இந்நிலையில் விராட் கோலி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட களமிறங்குவார் என்பதால் விராட் கோலியை மீண்டும் மைதானத்தில் பார்த்து விடலாம் என அவரது ரசிகர்கள் ஆசைப்பட்டுக்கொண்டு இருந்தபோது, விராட் கோலி இந்தியாவுக்கு திரும்பியுள்ளது அவரது ரசிகர்களுக்கு சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), பிரசித் கிருஷ்ணா, கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்)