Kohli 100th Test Match: ’நடக்கப்போவது இதுதான்’- கோலியின் விக்கெட்டை முன்பே கணித்த ரசிகர்... வைரலாகும் ட்வீட்
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 8000 ரன்களை கடந்த 6ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். மேலும் அதிவேகமாக 8000 ரன்களை கடந்த 5ஆவது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொகாலியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறது. இந்திய அணியின் 35ஆவது டெஸ்ட் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த போட்டி விராட் கோலிக்கு 100வது டெஸ்ட் போட்டி என்பதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருந்தது.
இந்த இன்னிங்ஸில் அவர் சதம் அல்லந்து அரை சதம் அடிப்பார் என ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், அவர் 45 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறியதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், ரசிகர் ஒருவரின் ட்வீட் வைரலாகி வருகிறது. 12 மணி நேரத்திற்கு பதிவு செய்யப்பட்டுள்ள அந்த ட்வீட்டில், ”கோலியின் 100வது டெஸ்ட் போட்டியில் அவர் சதம் அடிக்க மாட்டார். அவர் 45 ரன்கள் எடுத்து, எம்புள்டினியாவின் பந்தில் ஆட்டமிழப்பார். அவுட்டானவுடன் அதிர்ச்சியாகும் விராட், ஏமாற்றத்தில் பெவிலியன் திரும்புவார்” என தெரிவித்திருக்கிறார்.
அவர் ட்வீட்டில் குறிப்பிட்டிருக்கும் ஒவ்வொன்றும் இன்று போட்டியின்போது உண்மையாக நடந்து முடிந்துள்ளது. போட்டியின் 44வது ஓவரை எம்புள்டினியா வீச வந்தார். அந்த ஓவரில், 45 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்டம்ப்ஸில் பந்துபட்டு அவுட்டாகினார் கோலி. அதிர்ச்சியில் நின்ற கோலி ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.
Kohli Won't score a 100 in his 100th test. Will score 45 (100) with 4 gorgeous cover drives and then Embuldeniya will knock his stumps over and he'll pretend to be shocked 😳😳 and will nod his head in disappointment
— shruti #100 (@Quick__Single) March 3, 2022
இந்த ட்வீட்டுக்கு ரிப்ளை அளித்திருந்த சேவாக், “வாவ்” என கமெண்ட் செய்திருக்கிறார்.
Wow!!! https://t.co/zCABz7ReCQ
— Virender Sehwag (@virendersehwag) March 4, 2022
இந்த போட்டியில் ரன் அடித்ததுமூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 8000 ரன்கள் கடந்து அசத்தினார் கோலி. மேலும் 100ஆவது டெஸ்ட் போட்டியில் 8000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். இவருக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 2006ஆம் ஆண்டு தன்னுடைய 100ஆவது டெஸ்ட் போட்டியில் 8000 ரன்களை கடந்து அசத்தியிருந்தார்.
அத்துடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 8000 ரன்களை கடந்த 6ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். மேலும் அதிவேகமாக 8000 ரன்களை கடந்த 5ஆவது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்