காயத்தால் உலககோப்பை டி20யில் இருந்து ஜானி பார்ஸ்டோ விலகல்..! இங்கிலாந்துக்கு அணிக்கு பெரும் இழப்பு...!
இங்கிலாந்து அணியின் ஆஸ்தான வீரரான ஜானி பார்ஸ்டோ காயம் காரணமாக உலககோப்பை டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார்.
உலககோப்பை டி20 கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. உலககோப்பை போட்டிக்கான அணிகளை ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் அணிகளும் அறிவித்து வருகின்றன. இந்த நிலையில், இங்கிலாந்து நாட்டு கிரிக்கெட் அணிக்கு உலககோப்பை தொடரில் பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
You've inspired and entertained us so much this summer. And you will again 💪
— England Cricket (@englandcricket) September 2, 2022
Speedy recovery, @JBairstow21 ❤️
You can't keep this guy down 😤
— England Cricket (@englandcricket) September 2, 2022
He'll be back. pic.twitter.com/TXVmoldTaB
இங்கிலாந்து அணியின் ஆஸ்தான வீரரான ஜானி பார்ஸ்டோ காயம் காரணமாக உலககோப்பை தொடரில் ஆட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது, இங்கிலாந்து அணி தற்போது தென்னாப்பிரிக்க அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறது. இந்த நிலையில், ஜானி பார்ஸ்டோ நேற்று லீட்சில் கோல்ப் ஆடியபோது, அவர் தடுமாறி கீழே விழுந்ததில் காலில் அடிபட்டது. இதனால், அவரது கீழ் மூட்டு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
View this post on Instagram
இதன்காரணமாக, ஜானி பார்ஸ்டோ தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் மற்றும் உலககோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். காயத்தில் இருந்து முழுவதும் மீள்வதற்காக அவர் சிகிச்சை மேற்கொள்ள உள்ளார். மேலும், இந்த காயம் காரணமாக ஜானி பார்ஸ்டோ டிசம்பரில் நடைபெற உள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் வரை அணியில் இடம்பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
ஜானி பார்ஸ்டோ தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், ஓவலில் நடைபெற உள்ள போட்டியில் அவருக்கு பதிலாக பென் டக்கெட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஜானி பார்ஸ்டோ தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், ஓவலில் நடைபெற உள்ள போட்டியில் அவருக்கு பதிலாக பென் டக்கெட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியின் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் தவிர்க்க முடியாத வீரராக வலம் வரும் ஜானி பார்ஸ்டோ 66 டி20 போட்டிகளில் ஆடி 1,337 ரன்களை விளாசியுள்ளார். அவற்றில் 8 அரைசதங்கள் அடங்கும். 95 ஒருநாள் போட்டிகளில் ஆடி 11 சதங்கள், 15 அரைசதங்களுடன் 3 ஆயிரத்து 634 ரன்கள் விளாசியுள்ளார். 89 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 5 ஆயிரத்து 482 ரன்களை விளாசியுள்ளார். அவற்றில் 12 சதங்களும், 23 அரைசதங்களும் அடங்கும்.