Bumrah 5 Wicket Hauls: இங்கிலாந்தை கதிகலங்கச் செய்த பும்ரா.. மீண்டும் கெரியர் பெஸ்ட் பெர்ஃபாமன்ஸ்..!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பும்ரா தனது பந்து வீச்சில் இங்கிலாந்தை நொறுக்கியுள்ளார். 6 விக்கெட்டுகள் வீழ்த்தி கெரியர் பெஸ்ட் கொடுத்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பவுலர் பும்ரா தனது பந்து வீச்சில் இங்கிலாந்தை நொறுக்கியுள்ளார். 6 விக்கெட்டுகள் வீழ்த்தி மீண்டும் கெரியர் பெஸ்ட் கொடுத்துள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் ஒருநாள் போட்டி இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் இந்திய அணியின் யார்க்கர் கிங் எனப்படும் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பும்ராவை, எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் தடுமாறி வந்தனர். இதற்கு முன்னர் இலங்கை அணிக்கு எதிராக 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி நடந்த போட்டியில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார் பும்ரா. இங்கிலாந்துக்கு எதிரான இந்த போட்டியில் 7.2 ஓவர்கள் பந்து வீசி, 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 3 பேரை டக் அவுட் செய்துள்ளார். இது பும்ராவின் கெரியர் பெஸ்ட் பர்ஃபாமன்ஸாக பதிவாகியுள்ளது.
ALSO READ | IND vs ENG 1st ODI Highlights: இங்கி. எதிரான போட்டியில் இந்தியா படைத்த சாதனைகள்..! என்னென்ன தெரியுமா?
முகமது ஷமி புதிய சாதனை
மேலும், இந்த போட்டியில் முகமது ஷமி சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வேகமாக 150 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற அரிய சாதனையை படைத்தார். முன்னதாக, இந்த சாதனையை அஜீத் அகர்கர் 97 போட்டிகளில் படைத்து தன்வசம் வைத்திருந்தார். சர்வதேச அளவில் மூன்றாவது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். முன்னதாக, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் 77 ஆட்டங்களில் படைத்தார். அவருக்கு அடுத்த இடத்தில் பாகிஸ்தானின் சக்லைன் முஷ்டாக் 78 போட்டிகளில் கைப்பற்றியுள்ளார். மூன்றாவது இடத்தில் இருந்த ரஷீத்கான் 80 ஆட்டங்களில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய சாதனையை தற்போது முகமது ஷமி பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். நான்காவது இடத்தில் ட்ரெண்ட் போல்டும், 5வது இடத்தில் ப்ரெட்லீயும் உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்