Jasprit Bumrah: ’அண்ணன்தான் இறங்கி வரவா..?' சீறிபாய்ந்து ஸ்டம்புகளை சிதறவிட்ட பும்ரா.. வைரலாகும் வீடியோ!
அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு ரெடியாகும் வகையில் பும்ரா பந்துவீச்சு வீடியோ ஒன்றை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இந்தியா மற்றும் அயர்லாந்து இடையேயான டி20 தொடர் வருகின்ற ஆகஸ்ட் 18ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பு ஜஸ்பிரித் பும்ரா வழங்கப்பட்டுள்ளது.
மீண்டும் வந்த பும்ரா:
காயம் காரணமாக நீண்ட நாட்களாக இந்திய அணியில் இடம் பிடிக்காமல் பும்ரா தவித்து வந்தார். காயத்தில் இருந்து மீண்ட அவர், தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில், மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.
இந்தநிலையில், அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு ரெடியாகும் வகையில் பும்ரா பந்துவீச்சு வீடியோ ஒன்றை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், பும்ரா நெட்டில் பந்துவீசும்போது, பேட்டிங் செய்த வீரர் ஆட்டமிழந்தனர். தற்போது இந்த வீடியோவை 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்து, கமெண்ட் செய்து வருகின்றனர்.
The moment we have all been waiting for. @Jaspritbumrah93 like we have always known him. 🔥🔥 #TeamIndia pic.twitter.com/uyIzm2lcI9
— BCCI (@BCCI) August 16, 2023
வருகின்ற ஆசியக்கோப்பைக்கான இந்திய அணியில் பும்ரா இடம் பிடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து, உலகக் கோப்பை அணியிலும் இடம் பிடிக்கலாம்.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி ஆகஸ்ட் 18ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 20ஆம் தேதியும், மூன்றாவது போட்டி ஆகஸ்ட் 23ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் டப்ளினில் உள்ள ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
View this post on Instagram
பும்ரா தலைமையிலான அணியில் ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷிவம் துபே, ஷாபாஸ் அகமது, முகேஷ் குமார், அவேஷ் கான் என முற்றிலும் இளம் படையுடன் களமிறங்குகிறது.
அயர்லாந்து டி20 போட்டிகளுக்கான இந்திய அணி முழு விவரம் :ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரின்கு சிங், சஞ்சு சாம்சன் (வி.கே.), ஜிதேஷ் சர்மா (வி.கே), சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், அவேஷ் கான்