ICC Men’s T20I Team of Decade: "என்னை கௌரவித்த ஐசிசிக்கு நன்றி"... ஐசிசி பத்தாண்டிற்கான டி20 அணியில் இடம்பிடித்த பும்ரா!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பத்தாண்டிற்கான டி20 அணியில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா இடம்பிடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பத்தாண்டிற்கான டி20 அணியில் இந்திய வீரர் ஜஸ்பிரித் பும்ரா இடம்பிடித்துள்ளார்.
இதுகுறித்து ஜஸ்பிரித் பும்ரா நேற்று (வியாழக்கிழமை) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பத்தாண்டிற்கான டி20 அணியில் தான் இடம்பிடித்துள்ளதாகவும், ஐசிசி தன்னை கௌரவித்ததாகவும் அதற்கான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
2020 முதல் கடந்த பத்தாண்டிற்கான சிறந்த அணியை ஐசிசி அனைத்து வடிவங்களிலும் வெளியிட்டது. அந்த டி20 அணியில், ரோஹித் சர்மா, விராட் கோலி, எம்எஸ் தோனி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய நான்கு இந்திய வீரர்கள் லெவன் அணியில் இடம் பிடித்தனர். இந்த நட்சத்திர அணிக்கு எம்எஸ் தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐசிசியின் பத்தாண்டிற்கான T20I அணி:
ரோஹித் சர்மா, கிறிஸ் கெய்ல், ஆரோன் ஃபின்ச், விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், கிளென் மேக்ஸ்வெல், எம்எஸ் தோனி (கேப்டன்), கீரன் பொல்லார்ட், ரஷித் கான், ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் லசித் மலிங்கா.
A fast bowler par excellence ✨
— ICC (@ICC) June 10, 2022
Jasprit Bumrah with his ICC Men’s T20I Team of the Decade cap 👏 pic.twitter.com/Uilr65sGk4
28 வயதான ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணிக்காக இதுவரை 57 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 67 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல், டி20 வடிவத்தில் அவரது பந்துவீச்சு சராசரி 19.89 ஆகும். 3/11 என்ற சிறந்த பந்துவீச்சையும் பதிவு செய்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்