Bumrah Siraj: ஆஸி.,யை கலங்கடிக்கும் பும்ரா, 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை - கதறவிட்ட டிஎஸ்பி சிராஜ்..!
Bumrah Siraj: டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.

Bumrah Siraj: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்திய அணி ஆல்-அவுட்:
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியின், நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே, இந்திய அணி 369 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதையடுத்து, 105 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.
அடுத்தடுத்து சரிந்த விக்கெட்:
முதல் இன்னிங்ஸை போன்றே இரண்டாவது இன்னிங்ஸிலும், ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அதிரடியாக ரன் குவிக்க முற்பட்டனர். ஆனால், இந்திய வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதன்படி, சாம் கோன்ஸ்டாஸ் 8 ரன்கள், டிராவிஸ் ஜெட் 1 ரன் மற்றும் அலெக்ஸ் கேர் 2 ரன்கள் என ஒற்றை இலக்கங்களில் ஆட்டமிழக்க, மிட்செல் மார்ஷ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். உஸ்மான் கவாஜா 21 ரன்களிலும், ஸ்டிவ் ஸ்மித் 13 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால், 91 ரன்களை சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா அணி திணறி வருகிறது.
We only believe in Jassi bhai 😎
— BCCI (@BCCI) December 29, 2024
200 Test Wickets for Boom Boom Bumrah 🔥🔥
He brings up this milestone with the big wicket of Travis Head.#TeamIndia #AUSvIND @Jaspritbumrah93 pic.twitter.com/QiiyaCi7BX
பும்ரா படைத்த சாதனைகள்:
ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் பும்ரா, 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதில், கோன்ஸ்டாஸ், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோரின் விக்கெட்டுகள் அடங்கும். டிராவிஸ் ஹெட்டை வீழ்த்தியதன் மூலம், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, அதிவேகமாக 200 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆனார். அதோடு,
- 4வது வேகமான 200 டெஸ்ட் விக்கெட்டுகள் (பந்துகள் மூலம்) - 8484
- 200-க்கும் மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளுடன் எந்தவொரு பந்துவீச்சாளரின் சிறந்த சராசரி
- இந்திய வேகப்பந்து வீச்சாளரால் ஆஸ்திரேலியாவில் ஒரு தொடரில் அதிக விக்கெட்டுகள் - 29 விக்கெட்டுகள் போன்ற சாதனைகளையும் படைத்துள்ளார்.
31 வயதான பும்ரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை எட்டிய 12வது இந்திய பந்துவீச்சாளர் ஆவார். கபில்தேவ் தனது 50வது டெஸ்டில் மைல்கல்லை எட்டியதன் மூலம், அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆவார். கபில்தேவ் தனது 50வது டெஸ்டில் மைல்கல்லை எட்டியதன் மூலம், அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளராக இருந்தார். ஆனால், அந்த மைல்கல்லை பும்ரா தனது 44வது போட்டியிலேயே அந்த சாதனையை எட்டியுள்ளார்.
கதறவிட்ட டிஎஸ்பி சிராஜ்:
மறுமுனையில் வேகப்பந்து வீச்சாளர் சிராஜும் அதிரடியாக பந்துவீசி, இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி பும்ராவிற்கு பக்கபலமாக செயல்பட்டார். குறிப்பாக, தொடக்க ஆட்டக்காரர் கவாஜாவை கிளீன் போல்டாக்கியதோடு, ஸ்டீவ் ஸ்மித்தை கேட் முறையிலும் ஆட்டமிழக்கச் செய்தார்.




















