James Anderson: லார்ட்ஸ் டெஸ்டுடன் விடை பெறுகிறார் ஜேம்ஸ் ஆண்டர்சன்! ரசிகர்கள் பெரும் சோகம்!
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், விரைவில் நடைபெற உள்ள உள்நாட்டு தொடருக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஓய்வை அறிவித்த ஜேம்ஸ் ஆண்டர்சன்:
இங்கிலாந்து அணி வருகின்ற ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக ஆறு டெஸ்ட் போட்டிகள் கொண்ட உள்ளூர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், விரைவில் நடைபெற உள்ள உள்நாட்டு தொடருக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
உருக்கமான இன்ஸ்டா பதிவு:
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “நான் சிறுவயதில் இருந்தே நான் விரும்பிய விளையாட்டை விளையாடி, என் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய 20 வருடங்கள் நம்பமுடியாதவை. டேனியலா, லோலா, ரூபி மற்றும் என் பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் இல்லாமல் என்னால் இதை செய்திருக்க முடியாது.
அவர்களுக்கு ஒரு பெரிய நன்றி. மேலும், இதை உலகின் சிறந்த பணியாக மாற்றிய வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு நன்றி. வரவிருக்கும் புதிய சவால்களுக்காக நான் உற்சாகமாக இருக்கிறேன், பல ஆண்டுகளாக என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்
அதிக விக்கெட்டுகள் எடுத்த முதல் வேகப்பந்து வீச்சாளர்:
41 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்த ஆண்டு இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் 700 விக்கெட்டுகளை வீழ்த்தி உலகின் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன், இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களே 700 விக்கெட்களை எடுத்திருந்தனர்.
View this post on Instagram
முத்தையா முரளிதரன் (800), ஷேன் வார்னே (708) ஆகியோர் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியதன் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.
கடந்த 2003 ம் ஆண்டு ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கி 194 ஒருநாள், 19 டி20 மற்றும் 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மேலும் படிக்க: IPL 2024: சஞ்சீவ் கோயங்காவிற்கு பாடம் புகட்டிய தோனி மனைவி! தல சம்சாரம்னா சும்மாவா?
மேலும் படிக்க: KKR vs MI: கொல்கத்தா - மும்பை..மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம்!