Irfan Pathan's List: ”உலக கோப்பை கிரிக்கெட் முதல் போட்டியில் இந்த 11 பேர்தான் எனது தேர்வு”: இர்பான் பதான்
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் 11 ஆட்டக்காரர்களை இர்பான் பதான் தேர்வு செய்துள்ளார்.

உலக கோப்பை நடைபெறும் ஆஸ்திரேலியாவின் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு முதல் ஆட்டத்தில், இந்த 11 பேர்தான் எனது தேர்வு என இர்பான் பதான் தெரிவித்துள்ளார்
உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி:
அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களை பிசிசிஐ அறிவித்தது.
ரோஹித் சர்மா (கேப்டன்), கே எல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், முகமது. ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், பும்ரா ஆகிய 15 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
காத்திருப்பு வீரர்கள் - முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர் ஆகியோர் உள்ளனர்.
One title 🏆
— BCCI (@BCCI) September 12, 2022
One goal 🎯
Our squad 💪🏻#TeamIndia | #T20WorldCup pic.twitter.com/Dw9fWinHYQ
”இந்த 11 பேர்தான்”
சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து அக்டோபர் 23-ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் விளையாட உள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பை டி20 தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து,இந்திய அணியில் தேர்வானவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்றும், ஆஸ்திரேலிய மண்ணிற்கு ஏற்ப முதல் போட்டியில், இந்த 11 பேர்தான் சரியான ஆட்கள் என தனது விருப்பத்தை முன்னாள் இந்திய அணி வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்,
Congratulations to all the players who got selected to play the World Cup for team india. Huge Privilage 🇮🇳. What a turn around for @HoodaOnFire this has been. Well done boy.
— Irfan Pathan (@IrfanPathan) September 12, 2022
அவர் தெரிவித்துள்ளதாவது,
முதல் போட்டியில் அனுபவமிக்க பந்துவீச்சாளர்கள் தேவை, அதில் ஒரு சுழற்பந்து வீச்சாளர் இருக்க வேண்டும். என்னுடைய விருப்ப தேர்வான 11 ஆட்டக்காரர்கள்,
ரோஹித் சர்மா , கே.எல்.ராகுல்,விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்திர சாஹல், பும்ரா, அக்சர் படேல் மற்றும் புவனேஷ்வர் குமார்.
பந்து வீச்சாளர்களை பொறுத்தவரையில், சுழற்பந்து வீச்சாளராக சாஹல் ஒருவரையும், வேகப்பந்து வீச்சாளராக பும்ரா, அக்சர் படேல் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகிய மூன்று பேரையும் தேர்வு செய்துள்ளார். தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்து, ரிசப் பந்தை தவிர்த்திருக்கிறார், மேலும் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினையும் இர்பான் பதான் தவிர்த்திருக்கிறார்.
முதல் போட்டியானது, இந்தியாவுடனான முதல் போட்டி பாகிஸ்தான் அணியுடன் என்பதால், மெல்போர்ன் மைதானம் அதிரும் என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் முதல் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

